» » 2000 வருடம் ஆகியும் மங்காத வண்ண ஓவியங்கள் எங்கே தெரியுமா?

2000 வருடம் ஆகியும் மங்காத வண்ண ஓவியங்கள் எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜந்தா எனும் ஊரில் அமைந்துள்ளது.

இவை புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் ஆகும்.

அந்த காலத்திலேயே இப்படி ஒரு அசாத்திய திறமைகளை கொண்டவர்கள் இருந்திருக்கிறார்களா என்று உங்களை வாயைப் பிளக்கவைக்கும் இந்த இடத்துக்கு உங்களை சுற்றுலா அழைத்துச் செல்கிறோம் வாங்க

உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா? 

உலகமே வியக்கும் அதிசயம்

உலகமே வியக்கும் அதிசயம்

உலகின் பல்வேறு அறிஞர்கள் வந்து பார்வையிட்டு இந்த குடைவரைகளையும், ஓவியங்களையும் கண்டு மெய்சிலிர்த்துவிட்டு செல்கின்றனர். அப்படி என்னதான் இருக்கு தெரியுமா?
Soman

29 குடைவரை கோயில்கள்

29 குடைவரை கோயில்கள்

இந்த மலையை குடைந்து 29 குடைவரை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

இதன் கட்டுமான பொறியியலின் முன் இப்போதுள்ள பொறியியல் தொழில்நுட்பங்கள் எதுவுமில்லை என்றாகிறது. அந்த அளவு அருமையான கட்டுமானத்துக்கு அஜந்தா எப்படி பெயர் பெற்றது?

Freakyyash

மர்மங்கள் நிறைந்த அஜந்தா

மர்மங்கள் நிறைந்த அஜந்தா

இந்தியாவின் 2000 ஆண்டுகள் பழமையான, மர்மங்கள் நிறைந்த அஜந்தா குகைகளில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா

அதுதான் புத்தரை பற்றி நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைகளை அப்படியே புரட்டிப் போடும் அளவுக்கு தகவல்கள்... உங்களுக்காக

Ekta Abhishek Bansal

உலகின் முதல் புத்த ஆலயம்?

இதுதான் உலகின் முதல் புத்த பெரிய கட்டுமான ஆலயமாக கருதப்படுகிறது.

இந்தியாவில்தான் புத்தமதம் தோன்றியது. இங்கு புத்தருக்காக பெரிய நினைவு சின்னம் எழுப்ப அவர்கள் நினைத்திருக்கவேண்டும் என்கிறது நமக்கு கிடைக்கவரும் சிலதகவல்கள்.

மறுஜென்ம நம்பிக்கை

மறுஜென்ம நம்பிக்கை

இந்த குகையில் காணப்படும் ஓவியங்களும், சிலைகளும் புத்தரின் பல்வேறு அவதாரங்களாக கருதப்படுகின்றன? புத்தருக்கு மறுஜென்மத்தில் நம்பிக்கை இருந்ததாக இதை வைத்து சிலர் கூறுகின்றனர்.

wiki

இந்து மதத்துக்கு மாற்றா புத்தமதம்

இந்து மதத்துக்கு மாற்றா புத்தமதம்


இந்து மதத்துக்கு மாற்றாக கருதியவர்கள் பலர் புத்தமதத்துக்கு மாறியதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். புத்தருக்கு ஞானம் பிறந்தது என்பதாலும், மேலும் அவர் முந்தைய அடுத்த ஜென்மங்களில் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் அஜந்தா ஓவியங்களை வைத்து கூறமுடியுமா? அப்படி என்றால் உண்மையில் அஜந்தா ஓவியங்கள் கூறவருவது என்ன?

wiki

எவ்வளவு பழமை தெரியுமா

எவ்வளவு பழமை தெரியுமா

கிமு 200லேயே கட்டப்பட்ட இந்த குடைவரைக் கோயில்கள் கிபி 6ம் நூற்றாண்டு வரை கட்டியுள்ளனர் என்றால் இதன் சிறப்பை நினைத்து பாருங்கள்.

wiki

ஓவியங்கள்

ஓவியங்கள்

இங்குள்ள ஓவியங்கள் இல்லறத்தை போதிக்கின்றன.

இந்த ஓவியங்கள் பாறைகளில் மட்டுமல்லாமல், கூரைகளிலும் வரையப்பட்டுள்ளன.

Woudloper

வண்ணப்பூச்சிலும் ஆச்சர்யங்கள்

வண்ணப்பூச்சிலும் ஆச்சர்யங்கள்

இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்ணங்கள். அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையப்பட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன.

wiki

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்திலிருந்து சுமார் 107 கி.மீ தொலைவில் உள்ள அழகான கிராமம் அஜந்தா. இங்கிருந்து 12கி.மீ தொலைவில் உள்ள காடுகளில் குடைவரைக்-கோவில்களும், ஓவியங்களும் அமைந்துள்ளன.

wiki

பெயர் காரணம்

பெயர் காரணம்

இவை இந்த கிராமத்தின் பெயரால் அஜந்தா குகைகள் என்றே அழைக்கப்படுகின்றன.

wiki

புத்தர்களின் வாழ்க்கை

இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.

பிட்சுக்களின் ஓய்விடம்

பிட்சுக்களின் ஓய்விடம்

குகைகளை முன்பு மழைக்காலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக புத்தபிட்சுகள் பயன்படுத்தியிருக்கின்றனர்.

wiki

கட்டிடக்கலை

கட்டிடக்கலை


கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இவை இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

wiki

குகை கண்டுபிடிக்கப்பட்டது

குகை கண்டுபிடிக்கப்பட்டது

ஏப்ரல் 1819இல் சென்னை மாகாணத்தைச்சேர்ந்த அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்றார்.

ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார்.

அஜந்தா பற்றிய மேலும் தகவல்களுக்கு

அஜந்தா பற்றிய மேலும் தகவல்களுக்கு

அஜந்தா பற்றிய மேலும் தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்

இந்த மாதம் அல்டிமேட் டாப் 5 கட்டுரைகள்:

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

அலறியடித்து ஓட்டம்பிடிக்கும் பக்தர்கள் 6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள் எங்கே தெரியுமா?

ஏழுமலையானின் வியப்பூட்டும் மர்மங்கள் குறித்து தெரியுமா?(விடியோ)

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி!

Read more about: travel caves