Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக மலைப்பகுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை – தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

தமிழக மலைப்பகுதிகளில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை – தமிழக அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை லட்சக்கணக்கான பெண்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள் இனி இலவச பேருந்து சேவையை பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது!

1

பல மாநிலங்களிலும் தமிழகத்திலும் வெற்றி கண்ட இலவச பேருந்து சேவை

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பயணச் செலவைப் பற்றி கவலைப்படாமல் பயணச் சேவையைப் பெறும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், மலைப்பகுதிகளில் பணிபுரியும் பெண்களின் நிலை என்ன? அத்தகைய பெண்களுக்கு உதவ, தமிழக பழங்குடியினர் சங்கம், நகர எல்லைகளுக்கு அப்பால் பார்க்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது.

நகரங்களை விட மலைப்பகுதிகளில் கட்டணம் அதிகம்

ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. குறைந்த பட்ச கட்டணம் இப்போது ரூ.6 ஆக உள்ளது, இது முந்தைய சாதாரண மொஃபுசில் பேருந்துகளுக்கு ரூ.5 ஆக இருந்தது. மலை பகுதிகளில் பயணிக்கும், பயணிகள் கூடுதலாக 20% செலுத்த வேண்டும், இதன் விளைவாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.6 க்கு பதிலாக ரூ.7.20 ஆக உள்ளது.

தமிழக பழங்குடியினர் சங்கம் எடுத்த முடிவு

நகரவாசிகளுக்கு இது கட்டுப்படியாகக்கூடியதாகத் தோன்றினாலும், மலைப்பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அதே வருமானம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலையில், தமிழக பழங்குடியினர் சங்கம் ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ளது.

மலைப்பகுதியில் டவுன் பஸ்கள் இயக்கப்படவேண்டும்

மலைப்பகுதியில் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், மலைப்பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடியினர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, மலைப் பகுதிகளில் மொஃபுசில் பேருந்துகளை சேர்க்க மக்கள் விரும்புகிறார்கள் என்றும் மலைப்பகுதிகளில் டவுன் பஸ்கள் இயக்கப்படாததால், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

2

மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்

சங்கத்தின் தாளவாடி ஒன்றிய மாநாடு ஹாசனூரில் ஜூலை 16, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. மாநாட்டில் சங்க செயலாளர் ஜீவபாரதியுடன் சட்ட ஆலோசகர் எஸ்.செயராசு உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.மோகன் குமாரும் மாநாட்டில் பங்கேற்றதாக தெரிய வந்துள்ளது.

பழங்குடியினருக்கும் சேவைகள் வழங்கப்படவேண்டும்

தாளவாடி, கடம்பூர், பர்கூர் போன்ற மலைப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் வசிப்பதாக தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மலையோரப் பகுதிகளில் உள்ள பெண்களுக்குப் பேருந்து திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்தவர்களும் இந்தப் பகுதிகளில் வசிப்பதால் அவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

3

உங்களின் கருத்து என்ன

மலையகப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு மற்ற பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு கிடைக்கும் அதே இலவச பேருந்து பயணப் பலன்களைப் பெற உதவவேண்டும் என்பதே அவர்களின் முழு நோக்கமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் சங்கத்தின் இந்த நடவடிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

More News

    Read more about: tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+