» »உலகின் மிகப்பெரிய கிச்சன் எங்க இருக்குனு தெரியுமா?

உலகின் மிகப்பெரிய கிச்சன் எங்க இருக்குனு தெரியுமா?

Written By: Udhaya

தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட 'அன்னதானம்' உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் நம் கோயில்களில் தவறாமல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இன்றும் இந்தியாவெங்கும் பல கோயில்களில் திருவிழா காலங்களிலும், வார விஷேச பூஜை நாட்களின் போதும் அன்னதானம் வழங்கப்படுவது வாடிக்கையான நிகழ்வாகும். ஆனால் சில கோயில்களில் வருடத்தின் 365 நாட்களும், 3 வேலையும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் ஒன்றான சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலில் தான் இந்தியாவின் மிகப்பெரிய சமையற்கூடம் இருக்கிறது. அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்

இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அம்ரித்சரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப். உலகெங்கும் வாழும் சீக்கியர்களின் புனித கோயிலாக திகழும் இக்கோயிலானது தங்க தகடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் 'பொற்கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.

bookchen

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு


500 வருடங்களுக்கு முன்பு சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக்ஜியின் முக்கியமான போதனைகளுள் ஒன்று உயிர் வாழ்வதற்கான அடிப்படையான உணவு சாதி, மத, இன, மொழி, சமூக அந்தஸ்து போன்ற எந்த வித பாகுபாடும் இன்றி எல்லோருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

Arian Zwegers

லங்கர்

லங்கர்

அதனை செயல்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்டது தான் 'லங்கர்' என்று அழைக்கப்படும் பொது சமையல் கூடம் ஆகும். பொற்கோயிலுக்கு அருகில் இருக்கும் இந்த லங்கரில் ஒரு நாளைக்கு மூன்று வேலையும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை உணவருந்துகின்றனர்.

Laura7581

இலவசமாகவே உணவு

இலவசமாகவே உணவு

இத்தனை பேருக்கும் இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது என்பது தான் இங்கே வியக்கத்தகும் அம்சம் ஆகும். ரொட்டி, பருப்பு, காய்கறிகள், அரிசி போன்றவை இங்கே பரிமாறப்படுகின்றன. அசைவத்துக்கு அனுமதி கிடையாது.

Scott Christian

நினைக்கவே மலைப்பாக இருக்கிறது

நினைக்கவே மலைப்பாக இருக்கிறது

இத்தனை பேருக்கும் உணவு தயாரிக்க ஒரு நாளைக்கு 12,500 கிலோ கோதுமை மாவு, 1,500 கிலோ அரிசி, 13,000 கிலோ பருப்பு, 2,000 கிலோ காய்கறிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்துமே கொடையாக வழங்கப்படுகிறது. நினைக்கவே மலைப்பாக இருக்கிறது அல்லவா ?

Kulveer Virk

மூன்று வேலை

மூன்று வேலை

இதோடு மூன்று வேலை உணவும் கைகளாலேயே தயாரிக்கப்படுகிறது. உணவு தயாரிக்கவும், பரிமாறவும், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களை கழுவுவதற்கும் விருப்பம் உள்ளவர்கள் முன்வந்து உதவி செய்யலாம்.

Axel Drainville

சம்மணம்

சம்மணம்

இங்கே உணவருந்த வருபவர்கள் யாராக இருந்தாலும் அனைவருடனும் ஒன்றாக தரையில் சம்மணம் இட்டு அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடிந்த பின்பு உங்களால் முடிந்தால் இங்குள்ள உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று முடிந்த விதத்தில் உதவி செய்திடுங்கள். Kulveer Virk

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

தாஜ் மஹாலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக இந்த பொற்கோயில் திகழ்கிறது. சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பேர் வரையும், திருவிழா நாட்களில் இரண்டு லட்சம் பேர் வரையிலும் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். Ian Armstrong

வரலாற்று முக்கியத்துவம்

வரலாற்று முக்கியத்துவம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல குருத்வாரா கோயில்கள் இந்த அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானதாக தங்கக்கோயில் என்று அழைக்கப்படும் ‘ஹர்மந்திர் சாஹிப்' கோயிலை குறிப்பிடலாம்.

சீக்கிய மதத்தினர்

சீக்கிய மதத்தினர்

சீக்கிய மதத்தினர் மத்தியில் புனிதமான வழிபாட்டுத்தலமாகவும் தலைமைப்பீடமாகவும் கருதப்படும் இந்த கோயில் தினமும் 10000 யாத்ரீக பக்தர்களை உலகெங்கிலிருந்தும் ஈர்க்கிறது.

கால்சா

கால்சா

கால்சா எனப்படும் மத அமைப்பின் தலைமைக்கேந்திரமாக கருதப்படும் ஷீ அகால் தக்த் இந்த கோயில் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கிறது. தங்கக்கோயில் மட்டுமல்லாமல் அம்ரித்ஸர் நகரில் பிபேக்சர் சாஹிப், பாபா அதல் சாஹீப், ராம்சர் சாஹிப் மற்றும் சந்தோக்ஸர் சாஹீப் போன்ற கோயில்களும் அமைந்திருக்கின்றன

வரலாற்று பின்னணி

வரலாற்று பின்னணி

சீக்கியர்களுக்கான யாத்ரீக ஸ்தலமாக மட்டுமன்றி அம்ரித்ஸர் நகரம் முக்கியமான வரலாற்று பின்னணி வாய்க்கப்பட்ட பூமியாகவும் அறியப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் ‘ஜாலியன் வாலா பாக்' படுகொலை எனும் துக்க நிகழ்வு 1919ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்தது. இந்த சோகச்சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் ஜாலியன் வாலா பாக் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது.

மஹாராஜா ரஞ்சித் சிங்

மஹாராஜா ரஞ்சித் சிங்


ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய சீக்கியர்களின் வரலாற்றுக்கு சான்றாக மஹாராஜா ரஞ்சித் சிங் மியூசியம், கைர் உத்தின் மஸ்ஜித், பதிண்டா கோட்டை, சரகர்ஹி நினைவுச்சின்னம் மற்றும் கோபிந்த்கர் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன.

ராணுவ அணிவகுப்பு

ராணுவ அணிவகுப்பு

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ராணுவ எல்லைக்கேந்திரமான வாகா பார்டர் எனும் இடம் அம்ரித்ஸர் நகருக்கு வரும் பயணிகளால் தவறாமல் விஜயம் செய்யப்படுகிறது. இங்கு நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. ஹிந்து யாத்ரீகர்களுக்கான சில முக்கியமான கோயில்களும் அம்ரித்ஸர் நகரில் அமைந்திருக்கின்றன.

முக்கியமான சுற்றுலா அம்சங்கள்

முக்கியமான சுற்றுலா அம்சங்கள்

துர்கியானா கோயில், மந்திர் மாதா லால் தேவி, இஸ்க்கான் கோயில், ஹனுமான் மந்திர் மற்றும் ராம் திரத் கோயில் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. கைசர் பாக், ராம்பாக், கல்சா கல்லூரி, குரு நானக் பல்கலைக்கழகம், தர்ன் தரன் மற்றும் புல் கஞ்சாரி போன்றவை அம்ரித்ஸர் நகரிலுள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

எப்படி செல்வது அம்ரித்ஸர் நகருக்கு?

எப்படி செல்வது அம்ரித்ஸர் நகருக்கு?


பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அம்ரித்ஸர் நகரம் குறைவில்லாத போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கிறது. விமான மார்க்கம், ரயில் மார்க்கம் அல்லது சாலை மார்க்கமாக இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் இந்த நகரத்துக்கு சுலபமாக பயணம் மேற்கொள்ளலாம். ஸ்ரீ குரு ராம்தாஸ்ஜி சர்வதேச விமான நிலையம் இந்நகரத்தில் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையமும் பல்வேறு நகரங்களுக்கான ரயில் சேவை இணைப்புகளை கொண்டுள்ளது. NH1 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சாலைப்போக்குவரத்து மற்றும் பேருந்து சேவைகள் மூலம் இந்த நகரத்துக்கு செல்வதும் எளிதாக உள்ளது.

அம்ரித்ஸர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவம்

அம்ரித்ஸர் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்ற பருவம்


அம்ரித்ஸர் நகரின் பருவ நிலையானது இந்தியாவின் வடமேற்கு பிரதேசத்துக்கே உரிய இயல்புகளை கொண்டுள்ளது. கோடைக்காலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று முக்கிய பருவங்களை இப்பகுதி பெற்றிருக்கிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்நகருக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்றாலும், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சுற்றுலாப்பயணத்துக்கு உகந்தவையாக உள்ளன

Read more about: travel, temple