Search
  • Follow NativePlanet
Share
» »விஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா?

விஷ்ணு மோகினியாய் மாறிய இடம் எது தெரியுமா?

யானாவின் அசாதாரமான பாறைகளுக்கு நடுவே ஓர் மனமயங்கும் சுற்றுலா!

By Udhaya

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். வாருங்கள் அந்த இடத்தின் அழகை ரசிக்க புறப்படுவோம்.

 புராணக் கதை

புராணக் கதை

ஒருமுறை அசுரர்களின் அரசன் பஸ்மாசுரன் என்பவன் கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் வரம் ஒன்றை பெற்றான். அதாவது பஸ்மாசுரன் யார் தலையிலாவது கையை வைத்தால் அவர்கள் நொடிப்பொழுதில் சாம்பலாகிவிடுவார்கள் என்பதே அவன் வாங்கிய வரம். ஆனால் அந்தக் கொடிய அரக்கன் அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க எண்ணி, அவரை துரத்திக்கொண்டு ஓடினான். அவனிடமிருந்து தப்பித்து ஓடிய சிவபெருமான் தஞ்சமடைந்த இடம் தான் பைரவேஸ்வரா ஷிக்கரா என்ற குன்று. அப்போது சிவனை காப்பாற்றுவதற்காக மோகினி என்ற அழகிய இளம் மங்கையாக உருவெடுத்து வந்தார் விஷ்ணு பகவான்.

Ramesh Meda

 மோகினியாக மாறிய பகவான்

மோகினியாக மாறிய பகவான்

மோகினியின் அழகில் மயங்கிய பஸ்மாசுரன் அவளை நடனப் போட்டிக்கு அழைத்தான். அந்த சமயத்தில் மோகினியாய் நடனமாடிக் கொண்டிருந்த விஷ்ணு பகவான் தன்னுடைய தலையில் கையை வைத்து ஆடுவதுபோல் சாதுர்யமாக ஒரு அபிநயம் பிடித்தார். இதைக் கண்டு தன்னிலை மறந்த அசுரன் தன் தலையில் மறதியாக கையை வைக்க கணப் பொழுதில் சாம்பாலகிப் போனான் . இந்த அசுரனை அழிப்பதற்காக விஷ்ணு பகவான் மோகினியாக உருமாறிய இடம் தான் மோகினி ஷிக்கரா என்று சொல்லப்படுகிறது. இதெல்லாம் நமக்கு புராணம் கூறும் செய்திகள்.

Shash89

 பைரேஸ்வரா கோயில்

பைரேஸ்வரா கோயில்

பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் பைரவேஸ்வரா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும்.

Vinodtiwari2608

 சுயம்பாய் தோன்றிய லிங்கம்

சுயம்பாய் தோன்றிய லிங்கம்

யானா கிராமத்துக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய புனித ஸ்தலம், குகைக் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படும் பைரவேஸ்வரா கோயில். இது பைரவேஸ்வரா ஷிக்கராவின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு உள்ள தான்தோன்றி லிங்கம் வேண்டும் வரங்களை கொடுக்க வல்லது என்று நம்பப்படுகிறது. இந்த லிங்கத்தின் மீது பாறைகளிலிருந்து வழியும் நீர் இடைவிடாது சொட்டிக்கொண்டிருப்பதால் இதற்கு கங்கோத்பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு.அதோடு துர்கா தேவியின் வெங்கல சிலை ஒன்றும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Dinesh Valke

திருவிழாக் கோலம்

திருவிழாக் கோலம்


இந்த கோயிலில் பத்து நாட்கள் நடக்கும் மகாசிவராத்திரி திருவிழாவுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கில் புனித யாத்ரிகர்களும், பயணிகளும் கூட்டம் கூட்டமாக வருவர். அப்போது நடன நிகழ்ச்சிகள், யக்ஷகானா போன்ற நாட்டுபுற கலை நிகழ்சிகள் ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்படும். இச்சமயங்களில் கோயிலுக்குள் செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் பைரவேஸ்வரா ஷிக்கரா முழுமையும் வெறும் கால்களுடன்தான் நடந்துசெல்ல வேண்டும். இதற்கு பின் கோயிலிலிருந்து வெளிவந்த உடனே பயணிகள் மோகினி ஷிக்காராவுக்கு செல்லும் படிகளை அடைவார்கள்.

Vishwanatha Badikana

Read more about: travel karnataka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X