Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வைகாசி விசாக நாளில் எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வைகாசி விசாக நாளில் எங்கு செல்லவேண்டும் தெரியுமா?

சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் முருகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.

சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

இந்த நன்னாளில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயில்களுக்கு சென்றால் குழந்தை உண்டாகும்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

சூரபத்திரன் என்ற அரக்கனை முருகப்பெருமான் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தனது வைர வேல் கொண்டு வதைத்து வெற்றிகொண்டார். இது நிகழ்ந்த இடமே திருச்செந்தூர் ஆகும். எனவே தான் ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி விழாவன்று 'சூரா சம்காரம்' இங்கே வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி

கந்த சஷ்டி

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாட வேறொரு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது.

ஆறுமுகன்

ஆறுமுகன்

சில முனிவர்கள் உலக நன்மைக்காக புத்திரன் ஒருவன் வேண்டுமென்று கருதி ஐப்பசி மாத அமாவாசையன்று துவங்கி, ஆறு நாட்கள் யாகத்தை நடத்தியிருக்கின்றனர். அந்த ஆறு நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்து வெளியானதாகவும் அந்த ஆறும் இணைந்தவனே ஆறுமுகன் எனப்படும் முருகன் ஆவார். எனவே முருகன் திருச்செந்தூரில் ஜனித்த தினமே கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சென்னையில் இருந்து 600கி.மீ தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவை ஒட்டியா கடற்கரையில் அமைந்துள்ளது.

அறிந்திராத தகவல்கள்

அறிந்திராத தகவல்கள்


திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத தகவல்கள்

கயிலாய மலை

கயிலாய மலை

நாரத முனிவர் கயிலாய மலைக்கு சென்று சிவனிடம் தனக்கு கிடைத்த ஞானப்பழத்தை அன்பளிப்பாக வழங்குகிறார். தான் இதை புசிப்பதை விடவும் தன் பிள்ளைகள் இதை உண்பதே சரி என்று முடிவெடுத்த சிவபெருமான் விநாயகர் மற்றும் முருகனை அழைத்து 'யார் முதலில் உலகத்தை மூன்று முறை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம்' என்று ஒரு போட்டியை வைக்கிறார்.

ஞானப்பழம்

ஞானப்பழம்

இதைக் கேட்டவுடன் முருகன் தனது மயில்வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவருகிறார். ஆனால் விநாயகரோ சமயோசிதமாக தன் பெற்றோரே தமக்கு உலகம் என்று கூறி சிவன்-பார்வதியை மூன்று முறை வலம் வந்து ஞானப்பழத்தை பெறுகிறார்.

அகத்திய முனி

அகத்திய முனி

சிவ பெருமானை தரிசிக்க எல்லா முனிவர்களும், ரிஷிகளும் கயிலாயம் வந்துவிட பூமியின் எடை ஒருபக்கமாக அதிகரித்ததன் காரணமாக உலகம் சமநிலை இழந்துவிட சிவபெருமான் அகத்திய முனிவரை தென் பக்கம் சென்று சமநிலையை சரி செய்யுமாறு பணிக்கிறார்.

இடும்பன்

இடும்பன்

அகத்திய முனிவரோ இடும்பன் என்ற அரக்கனை அழைத்து தனது தோளில் இரண்டு மலைகளை சுமந்து சென்று தென்னகத்தில் வைக்குமாறு ஆணையிடுகிறார். அப்படி இடும்பன் மலைகளை கொண்டு செல்கையில் ஓரிடத்தில் அவற்றை கீழே வைத்துவிட்டு ஓய்வெடுக்கிறார்.

முருகன் சிலை ரகசியங்கள்

முருகன் சிலை ரகசியங்கள்

முருகன் சிலை ரகசியங்கள்

திருத்தணி

திருத்தணி

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது.

Srithern

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

சென்னையிலிருந்து 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடர்ந்து வசதிகள் உள்ளது.

Srithern

சுவாமிமலை

சுவாமிமலை

கோயில் நகரம் என்ற பெருமைக்குரிய கும்பகோணத்தில் இருந்து 8.5கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ஆம் படைவீடான சுவாமிமலை திருக்கோயில்.

 சிவமலை

சிவமலை

சுவாமிமலை பாலகனான முருகப்பெருமான் தனது தந்தைக்கு போதனை செய்திருக்கிறார். இதனாலேயே இவ்விடம் குருமலை, கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.

 நான்காம் படை

நான்காம் படை

முருகப்பெருமானின் நான்காம் படைவீடான சுவாமிமலைக்கு ஒரு பயணம்

நிஜமான காதல் தேசம் இதுதான்!

நிஜமான காதல் தேசம் இதுதான்!

நிஜமான காதல் தேசம் இதுதான்! அப்படி என்ன இருக்கு!

ஹேவ்லாக் தீவு

ஹேவ்லாக் தீவு

ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

லிங்கங்களின் மர்மங்கள்

லிங்கங்களின் மர்மங்கள்

உலகை அழிக்கும் வல்லமை கொண்ட லிங்கங்களின் மர்மங்கள் தெரியுமா?

அற்புத அரண்மனைகள்!

அற்புத அரண்மனைகள்!

உலகமே வியக்கும் இந்தியாவின் அற்புத அரண்மனைகள்! அப்படி என்னதான் இருக்கு இங்க?

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more