Search
  • Follow NativePlanet
Share
» »சனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..!

சனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..!

அனைத்து கிரகங்களுக்கும் திசா புக்திகள் என்று தனித்தனியே உண்டு. ஆனால், சனீஸ்வரருக்கு மட்டும் திசா புக்திகளுடன் ஏழரை சனி என்ற கூடுதல் திசையும், கண்ட சனி, அஷ்டம சனி போன்ற கோச்சார பிரிவுகளும் உண்டு. இந்த கால கட்டங்களில் அவரவர் ஜாதக பலத்துக்கேற்ப யோக, அதிர்ஷ்டங்களையும் கஷ்ட, நஷ்டங்களையும் தருவார். நல்ல ஆரோக்கியத்துடனும், செல்வச் செழிப்புடனும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசை. இந்த மூன்றையும் அருள்பவர் சனி பகவான். இவருக்கு ஆயுள்காரகன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த யோகங்கள் இன்றி சனி தோஷம் பிடித்தவர்கள் எவ்வித இன்பங்களையும் அனுபவிக்க முடியாமல் தவித்து வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவர்களுக்கு பல காரியங்களில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஜென்மச் சனி, குரு சனி என தொடர்ந்து சங்கடங்களை அனுபவித்து வருவோர் ஒரு முறை இந்த தலத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். பிடிச்ச சனி அலறியடிச்சு ஓடும்.

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

சனீஸ்வர பகவான் அபயஹஸ்த நிலையில் அருள்பாலிக்கும் ஒரே தலம் இலத்தூர் மதுநாதகசாமி கோவிலாகும். இந்த ஊரின் வழியே ராமன், லட்சுமணன் வானரங்களுடன் இலங்கை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது ராமனுக்குத் தாகம் ஏற்பட்டுள்ளது. உடனே அனுமன் தன் கதையினார் ஒரு பாறையில் ஓங்கி அடிக்கவே நீரோட்டம் பெருகி வந்துள்ளது. இன்றும் இத்தலம் அமைந்துள்ள பகுதியில் அனுமன் நதியைக் காண முடியும்.

Jchetan

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

அனுமன் நதிக்கரையோரம் இருந்த புளியமரத்தடியில் அகத்தியர் மணலில் செய்த லிங்கத்தை வகைத்து வழிபட்டு வந்தார். ஒரு நாள் மரத்தின் மீதிருந்த தேன் கூட்டில் இருந்து தேன் வடிந்து மணல் லிங்கத்தின் மீது விழுந்தது. மணல் லிங்கமும் நின்றாக இறுகிக் கல் லிங்கம் போல மாறிவிட்டது. அகத்தியர் அக்காட்சியைக் கண்டு மதுநாதா என வழிபட்டார். தேனிக்கு மது என மற்றொரு பெயர் உள்ளதால் அப்பெயரைக் கொண்டே அகத்தியர் இந்த லிங்கத்திற்கு திருநாமம் சூட்டியுள்ளார். புளியமரத்தின் இலை வழியாகத் தேன் வடிந்ததால் இந்த ஊர் இலைத்தூர் என அழைக்கப்பட்டு பின், காலப்போக்கில் இலத்தூர் என பெயர்பெற்றுள்ளது.

தலஅமைப்பு

தலஅமைப்பு

மதுநாதகசாமி கோவிலில் தட்சிணாமூர்த்தியும் சனீஸ்வர பகவானும் சிறப்பு பெற்ற கடவுளாக வழிபடப்படுகின்றனர். தட்சிணாமூர்த்தி சன்னிதி பிற கோவில்களில் பிரகாரத்தில் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில் இவரது சன்னிதி விமானத்தின் கீழே அமைந்திருப்பது சிறப்பு.

Mohan Krishnan

சனீஸ்வர பகவான்

சனீஸ்வர பகவான்

சனித் தொல்லையால் பாதிக்கப்பட்டோர் சனீஸ்வர விக்கிரக வழிபாட்டுக்கு ஏற்ற தலம் மதுநாதகசாமி கோவில். பிற கோவில்களில் சனீஸ்வரர் அபயஹஸ்த நிலையில் காட்சியளிப்பார். ஆனால் இக்கோவிலில் அருள்வழங்கும் வகையில் கைகளைக் காட்டியும், பகவானைச் சுற்றிவரும் வசதியும் இருப்பது இத்தலத்தில் மட்டுமே.

Suraj Belbase

தோஷம் போக்கும் சனீஸ்வரர்

தோஷம் போக்கும் சனீஸ்வரர்

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் செய்வதறியாது கிடக்கத் தேவையில்லை. இந்த சனிபகவான் தன்னை வலம் வரும் பக்தர்களுக்கு சனி தொடர்பான அனைத்துத் தோஷங்களையும் நீக்கி காக்கிறார். தொழில் நஷ்டம், தொடர் உயிரிழப்பு, திருமணத் தடையுடையோர் இவரை வழிபடுவது சிறப்பு.

த*உழவன்

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்

சனீஸ்வரனுக்கு உகந்த நாளாக சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் பக்தர்கள், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இத்தலத்தில் வந்து வழிபடுவர். சிலர், சனிபகவானுக்கு கருப்புத் துணி உடுத்தி தங்களது காணிக்கையும் செலுத்துவதை வாக்கமாகக் கொண்டுள்ளனர்.

E. A. Rodrigues

நடைதிறப்பு

நடைதிறப்பு

மதுநாதகசாமி கோவில் நடை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டு அபிஷேக பூஜை செய்யப்படுகிறது.

Anks.manuja

திருவிழா

திருவிழா

இக்கோவிலில், நவராத்திரி, திருவாதிரை, தை மாதத்தில் உற்சவத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாக்களாகும்.

Mahinthan5

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

திருநெல்வேலி மாவட்டம், இலத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு மதுநாதகசாமி கோவில். மாநகரத்தில் இருந்து பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சுமார் 69 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடைந்து விடலாம். குற்றாலத்தில் இருந்து இலத்தூர்- செங்கோட்டை சாலை வழியாக 12 கிலோ மீட்டர தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மூலமாக இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more