Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் இந்த அழகான ஐந்து மலைகளைப் பார்த்தால் நீங்கள் ஊட்டி, கொடைக்கானலை மறந்து விடுவீர்கள்!

தமிழ்நாட்டின் இந்த அழகான ஐந்து மலைகளைப் பார்த்தால் நீங்கள் ஊட்டி, கொடைக்கானலை மறந்து விடுவீர்கள்!

ஊட்டி, கொடைக்கானல், குன்னூர், மேகமலை, ஆனைமலை தான் தமிழ்நாட்டின் அழகான மலைவாசஸ்தலங்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்குமாம் நம் இன்று பார்க்கப் போகிற இந்த அழகான ஐந்து மலைவாசஸ்தலங்கள்! தமிழ்நாட்டின் இந்த ஐந்து மலைகளைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். பச்சை பசேல் மலைகள், பள்ளத்தாக்குகள், நீரோடைகள், ஜில்லென்ற வானிலை, அமைதி இவை யாவும் இந்த பிரபலமற்ற மலைவாசஸ்தலங்களின் அம்சங்கள் ஆகும். அந்த அழகான இடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

kodaikanalhillstaions

பன்றிமலை

திண்டுக்கல் மாவட்டத்தின் மையத்தில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது இந்த அழகிய பன்றிமலை. சுற்றிலும் பசுமை, சிறு சிறு நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், இதமான வானிலை, நம்மை தொட்டு செல்லும் மேகம் என இந்த இடமே ஒரு அழகான சோலை போல காட்சியளிக்கிறது.

pandrimalai1

சுற்றிலும் பசுமை, இதமான வானிலை, லேசான சாரல், இயற்கை எழில் கொஞ்சும் சிறு சிறு சுற்றுலாத் தலங்கள் என பன்றிமலை நம்மை எல்லா வகையிலும் கவர்ந்திழுக்கும். திண்டுக்கல் நகரில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் இருப்பதால் இங்கே பைக்கில் ரைடு செல்வது மிகவும் பேமஸ் ஆகும். செல்லும் வழியில் நீங்கள் பார்க்கும் இயற்கை காட்சிகளும், அழகும் அற்புதமாக இருக்கும்.

manjumalai1

மஞ்சுமலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய கிராமம் அன்செட்டியில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு அடர்ந்த வனப்பகுதியாகும், இங்கே ட்ரெக்கிங் மற்றும் கேம்பிங் செய்வது இப்போது பிரபலமாகி வருகிறது. இந்த இடம் பெங்களூருவிற்கு அருகில் இருப்பதால் பெங்களூர் நகர வாசிகளும் கூட வார இறுதியில் இந்த இடத்திற்கு ட்ரிப் பிளான் பண்ணலாம். இங்கே மிகவும் பிரபலமான மாரியம்மன் கோயிலை நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும். இனிமையான வானிலையும், ஆங்காகே இருக்கும் சிறு சிறு குளங்களும், ஓடைகளும், தோட்டங்களும் நம்மை பரவசமடையவைக்கும் பயணிகளே.

sirumalai

சிறுமலை

கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுமலை மலைத்தொடர்கள், பசுமை மற்றும் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு கண்கவர் காட்சியை வழங்குகிறது. சிறுமலை, திண்டுக்கல் நகரில் இருந்து 25 கிமீ தொலைவிலும், மதுரையில் இருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி, பசுமையான மலைத் தொடர்கள், வெள்ளிமலை முருகன் கோவில், வேளாங்கண்ணி தேவாலயம், மலை உச்சியில் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம், சுற்றிலும் உள்ள தோட்டங்கள் என எல்லாமே இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.

kollimalai1

கொல்லிமலை

"மௌண்டெயின் ஆஃப் டெத்" (mountain of death) என்று அழைக்கப்படும் கொல்லிமலை என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைத்தொடராகும். இது இன்றளவும் கமர்ஷியல் சுற்றுலாவால் இன்னும் தீண்டப்படவில்லை, அதனால் அதன் அழகு இன்னும் அப்படியே இயற்கை மணம் மாறாமல் இருக்கிறது. கொல்லிமலையின் "ஹேர்பின் பெண்டுகள்" (Hairpin bends) ஏரியல் வியூவில் பார்ப்பதற்கு மெய் சிலிர்க்க வைக்கிறது. கொல்லிமலையின் அழகான நீர்வீழ்ச்சிகளையும், மலைதொடர்களையும், பசுமையான பள்ளத்தாக்குகளையும் ரசித்துவிட்டு அங்கே விற்கும் பொருட்களை வாங்க மறக்காதீர்கள்.

kozhukkumalai1

கொழுக்கு மலை

உலகிலேயே உயரமான இடத்தில் தேயிலை விளையும் பகுதி தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை தானாம். பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே பரந்து விரிந்து கிடைக்கும் யானை இரங்கல் டேம், அடர்ந்த வனப்பகுதிகள், பல வியுபாயிண்ட்கள் என ஒரு நாள் முழுவதும் சுற்றி ரசிக்க கொழுக்குமலையில் ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மலை முகட்டில் தேயிலைத் தோட்டங்களின் நடுவே நடந்து செல்லும் யாவரும் மேகக் கூட்டங்களுடன் மறைந்து வெளியேறும் அனுபவத்தைப் பெறமுடியும் பயணிகளே.

இந்த அழகான இடங்கள் யாவும் மிகவும் பட்ஜெட் பிரண்ட்லி இடங்கள் ஆகும். அதிகபட்சம் ஒரு ஆளுக்கு ரூ. 5000 இருந்தாலே போதும், இரண்டு மூன்று நாட்கள் தாரளமாக ஒரு சூப்பர் ட்ரிப் அடித்து விட்டு வரலாம். நீங்கள் எப்போது இந்த இடங்களுக்கு செல்லப் போகிறீர்கள் மக்களே!

More News

    Read more about: megamalai pandri malai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+