மச்லா மக்ரா என்பது மீன் வடிவத்தில் காட்சியளிக்கும் ஒரு மலைக்குன்று ஆகும். இது ‘ஏக்லிங் கர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலைக்குன்று சஜ்ஜன்கர் அரண்மனைக்கு வெகு அருகில் உள்ளது.1764ம் ஆண்டு சிந்தியா வம்சத்தினர் உதய்பூர் நகரத்தை முற்றுகையிட்டபோது இந்த மலைக்குன்று வெடிபொருள் ஆயுதக்குவிப்புக்கு பயன்பட்டுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2,469 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையிலிருந்து பார்த்தால் ஒட்டு மொத்த உதய்பூரின் அழகையும் கண்டு களிக்க முடிகிறது. சிட்டி பேலஸ் அரண்மனையின் கோட்டைச்சுவரில் உள்ள கிஷன் போல் எனும் நுழைவாயில் இந்த மலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications