நேரு கார்டன் என்பது ஃபதேஹ் சாகர் ஏரியிலுள்ள முட்டை வடிவிலான ஒரு தீவு ஆகும். இந்த பூங்காத்தோட்டம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
1967ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அவரது பிறந்த நாளின்போது இந்த பூங்காத்தோட்டம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா உதய்பூர் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு அல்லித்தடாகம், பூச்செடிகள் மற்றும் நீரூற்றுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த பூங்கா வளாகத்தில் உள்ள மிதக்கும் உணவகம் பயணிகளுக்கு ரசித்து ருசிப்பதற்கான அம்சங்களை கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications