வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த முருகன் பாறா எனும் இடம் உள்ளது. முருகன் பாறா என்பது பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்டுள்ள ஒரு கோயிலாகும். முருகக்கடவுளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த முருகன் பாறா கோயில் குரிசுமலா மலையின் கிழக்கு பகுதியில் உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த முருகன் பாறா கோயிலுக்கு வருகை தருகின்றனர். பாறைகளில் வெட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த கோயில் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தையும் வெகுவாக கவர்கிறது.
பெரும்பான்மையான கருத்துக்களின்படி இந்தக்கோயில் கற்காலத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடுமையான பாறைப்பகுதிகளை செதுக்கி கலையம்சம் மிளிரும் கட்டமைப்புகளை உருவாக்கியிருக்கும் மனித இனத்தின் முயற்சிகளை நினைத்து பிரமிக்க வைக்கும் ஒரு முக்கியமான ஸ்தலம் இது.
வாகமண் மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் போது இந்த முருகன் பாறா கோயிலுக்கும் விஜயம் செய்ய மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications