Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாகமண் » ஈர்க்கும் இடங்கள் » குரிசுமலா ஆஷ்ரம்

குரிசுமலா ஆஷ்ரம், வாகமண்

46

குரிசுமலா மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் ஒரு ஆன்மீக ஆசிரமம் இந்த குரிசுமலா ஆஷ்ரம் ஆகும். குரிசுமலை எனும் பெயருக்கு புனிதச்சிலுவை மலை என்பது பொருளாகும்.

பெயருக்கேற்றபடி இந்த ஆசிரமம் நாஸ்ரணி கத்தோலிக்க பிரிவினர் மற்றும் காந்திய நெறியில் நம்பிக்கை உடையவர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜாதி, மத பேதமில்லாமல் இந்த ஆசிரமம் அனைத்து பிரிவினராலும் விஜயம் செய்யப்படுகிறது.

புனித வெள்ளி திருநாள் இந்த ஆசிரமத்தில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தர்மகாரிய செயல்பாடுகளுக்காகவும் இந்த ஆசிரமம் பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுதோடு உணவுப்பண்டங்களை விருந்தினர்களும் அங்கத்தினர்களும் வீணாக்கக்கூடாது என்பது போன்ற உயர்ந்த கொள்கை நெறிகளையும் இந்த ஆன்மீக மையம் பின்பற்றிவருகிறது.

இந்த ஆசிரமத்தில் ஒரு பிரம்மாண்டமான பிரார்த்தனைக்கூடம் உள்ளது. பக்தர்கள் இங்கு தியானம் மற்றும் தொழுகையில் ஈடுபடுகின்றனர். குரிசுமலா ஆஷ்ரமத்திற்கு அருகிலேயே பல பால் பண்ணைகளும் அமைந்துள்ளன.

இவற்றில் நாளொன்றுக்கு 1500 லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. குரிசுமலா மலையை சுற்றி 12 துணைக்குன்றுகளும் அமைந்துள்ளன. இவற்றில் மிக உயரமான குன்று மீட்சிப்பூங்கா என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது.

கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்தின் நினைவாக இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆன்மீக அம்சங்களுக்கு அப்பாற்பட்டு இந்த மலைப்பகுதியானது தேயிலைத்தோட்டங்கள், ஏரிகள் போன்ற திகட்டாத இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri