வர்கலா நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் வடக்கே கொல்லம் செல்லும் பாதையில் இந்த கப்பில் ஏரி அமைந்துள்ளது. வர்கலா பகுதியில் இது மற்றுமொரு விசேஷமான சுற்றுலா அம்சமாகும். அரபிக்கடலும் உப்பங்கழி நீர்த்தேக்கமும் சங்கமிக்கும் இந்த ஏரிப்பகுதியானது தென்னை மரங்களின் எழில் நிறைந்த அணிவகுப்புடன் காட்சியளிக்கிறது.
இங்குள்ள ஒரு பாலத்தின் மீதிருந்து ஏரியின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். படகுச்சவாரி செல்வதன் மூலம் அரபிக்கடலும் உப்பங்கழியும் கூடும் முகத்துவாரப் பகுதியையும் கண்டு மகிழலாம்.
சொந்த கவலைகளையெல்லாம் மறந்து இயற்கையோடு இயைந்து சுற்றியிருக்கும் அழகுக்காட்சிகளில் மூழ்கி திளைப்பதற்கு இது மிகவும் பொருத்தமான இடமாகும். புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற ஏராளமான காட்சிகளும் இங்கு மிகுதியாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications