Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » ஈர்க்கும் இடங்கள் » பாபஸ்நானம் கடற்கரை

பாபஸ்நானம் கடற்கரை, வர்கலா

34

திருவனந்தபுரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த பாபஸ்நானம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையிலுள்ள நீரூற்றில் மூழ்கி எழுபவர்களில் பாவங்கள் கழுவி துடைக்கபடுகின்றன எனும் நம்பிக்கையின் காரணமாகவே இந்த ஸ்தலம் ‘பாப – ஸ்நானம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

உறவினர்களின் அஸ்தியை கரைக்கவும் இங்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அஸ்தியை கரைத்துவிட்டு இங்குள்ள பாபஸ்நானம் நீரூற்றில் நீராடுவது புனிதமான சடங்காக கருதப்படுகிறது.

ஐதீக நம்பிக்கைகளின்படி, நாரத முனிவரை சந்தித்த சில பக்தர்கள் தாம் பாப காரியங்களில் ஈடுபட்டதை கூறி பிராயச்சித்தம் யாசித்ததாகவும், அவர்களுக்காக தனது மரவுரியை கழற்றி வீசிய நாரத முனிவர் அந்த மரவுரி விழ்ந்த இடத்திற்கு சென்று பிரார்த்திக்குமாறு அருளியதாகவும் ஸ்தலபுராணம் கூறுகிறது.

நாரத முனிவரின் மரவுரியான ‘வல்கலம்’ வந்து விழுந்ததால் இந்த பிரதேசம் முழுதுமே வர்க்கலா என்று அழைக்கப்பட்டது. நீரூற்று அமைந்துள்ள கடற்கரையானது பாபவிமோசனத்துக்கான புனித ஸ்தலமாகவே உருவெடுத்ததால் பாபஸ்நானம் என்னும் விசேஷப்பெயரையும் பெற்றுள்ளது.

ஆன்மீக அம்சங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த பாபஸ்நானம் கடற்கரையில் அமர்ந்தபடி தென்னை மரங்கள் அசைந்தாடும் பின்னணிச்சூழலில், சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது வாழ்வில் மறக்க முடியா தருணங்களில் ஒன்றாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed