Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வர்கலா » ஈர்க்கும் இடங்கள் » வர்கலா பீச்

வர்கலா பீச், வர்கலா

34

வர்கலா பீச் திருவனந்தபுரத்திலிருந்து 54கி.மீ வடக்கே அமைந்துள்ளது. இந்த கடற்கரைப்பகுதியில் 1ம் நூற்றாண்டிலிருந்தே நடத்தப்பட்டு வரும் வாவு பேலி எனப்படும் ஹிந்து சடங்கிற்காக இந்த இடம் புகழுடன் அறியப்படுகிறது.

ஜனார்தன ஸ்வாமி கோயில் எனும் 2000 வருட பழமையை கொண்ட அற்புதமான கோயில் ஒன்று இங்கு முக்கிய புண்ணியஸ்தலமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த கடற்கரையில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

மருத்துவக்குணங்கள் கொண்ட நீருற்று ஒன்றும் இங்குள்ளது. மக்கள் இதனை புனிதமான அம்சமாக கருதுவதுடன் இதில் பக்தியுடன் நீராடவும் செய்கின்றனர்.

கடற்கரை கைப்பந்து விளையாட்டு, நீச்சல், அலைப்படகு சவாரி அல்லது பீச் வேடிக்கை போன்ற ஏதாவதொரு பொழுதுபோக்கில் இங்கு பயணிகள் ஈடுபடலாம். அசைந்தாடும் தென்னை மரங்களின் பின்னணியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே இந்த கடற்கரையில் பொழுதை கழிக்கும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். கடற்கரையை ஒட்டிய உள்ளூர் கடைகளில் ஞாபகார்த்த பொருட்களும் வாங்கிக்கொள்ளலாம்.

வர்கலா கடற்கரைப்பகுதியானது வடக்கு முனை மற்றும் தெற்கு முனை என்று இரண்டு பிரிவுகளைக்கொண்டுள்ளது. வடக்குப்பகுதியில் இஸ்ரேலி, சைனீஸ், இத்தாலியன் மற்றும் சர்வதேச உணவு தயாரிப்புகளை பரிமாறும் கஃபே’க்கள் நிரம்பியுள்ளன. நவம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட பருவம் இந்த கடற்கரைக்கு விஜயம் செய்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue