Search
  • Follow NativePlanet
Share

விதிஷா - புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள்!

30

வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த புகழ்பெற்ற இடமான விதிஷா பிஹில்சா என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைய குப்த அரசின் புகழை எடுத்துரைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கு காணப்படும் பெசாநகர் மற்றும் உதயகிரி குகைகள் விளங்குகின்றன. மத்திய பிரதேசத்தில் இருக்கும் இவ்விடம் அவ்விடத்தின் தலைநகரமான போப்பாலுக்கு மிக அருகில் உள்ளது. இங்கு இருக்கும் வர்த்தக சந்தை 2600 வருடங்களுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டது. பேரரசர் அசோகரை பற்றிய பலவித பிரமாண்டமான குறிப்புகளை வரலாற்று களஞ்சியமாக இங்கு காணலாம். இங்கு நின்று ஷாருக்கான் நடித்த 'அசோகா' திரைப்படத்தை நினைத்து பார்த்தால் வெள்ளை குதிரையில் மன்னன் வருவதை இயல்பாக உணர்வீர்கள்.

விதிஷாவை சுற்றி இருக்கும் சுற்றுலாத் தலங்கள்

விதிஷா சுற்றுலா வருபவருக்கு பல அதிசயங்கள் காத்திருக்கின்றன. இங்கு வருவோர் பலவித மதம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்தலங்களையும், புகழ்மிக்க சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் காண முடியும்.

இங்குள்ள பாழடைந்த, வரலாற்று தொல்பொருள் நிறைந்த இடங்கள் வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கின்றன. கிரிதாரி கோவில், உதயேஷ்வரா கோவில், தஷவ்தர் கோவில், மாலாதேவி கோவில், பஜ்ரமத் கோவில், கதர்மல் கோவில், மற்றும் சோலா கம்பி கோவில் இங்கு புகழ்மிக்க கோவில்களாகும்.

1682-ஆம் ஆண்டு அவுரங்கசிப் மன்னரால் அழிக்கப்பட்ட பிஜாமண்டல் இங்கு காணப்படும் புகழ்பெற்ற இடம். விதிஷாவில் ஜெயின் இனத்தவருக்காக கட்டப்பட்ட இடம்தான் சிரோன்ஜ்.

கம்பா பாபா என்று அழைக்கப்படும் விதிஷாவின் ஹிலியோடோரஸ் என்ற இடம் இங்கு பிரபலம். விதிஷாவின் சுற்றுலா இடங்களில் உதயகிரி குகைகள், அரிய சிற்பங்கள் கொண்ட கியாராஸ்பூர், லோஹாங்கி, ஹிண்டோலா மற்றும் டோரானா மிகவும் பிரபலம். அதோடு 155 காலத்திற்கு முன்  தரம்பூரில் படைக்கப்பெற்ற ஜெயின் உருவங்களும் பிரசித்திபெற்றவை.

விதிஷா செல்ல சிறந்த வழி

விதிஷாவிற்கு ரயில், விமானம், சாலை வழி போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் உண்டு. இங்கு அருகிலிருக்கும் விமான நிலையம் ராஜா போஜ் விமான நிலையமாகும். இதற்கென தனி ரயில் நிலையமும் உண்டு.

விதிஷா செல்ல சிறந்த காலம்

மழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இங்கு செல்லலாம். இக்காலக் கட்டத்தில் இங்கு பருவம் அழகாகவும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும். அக்டோடபர் முதல் மார்ச்சு மாதத்தில் குளிக்காலத்தில் இங்கு சென்றாள் விதிஷாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

விதிஷா சிறப்பு

விதிஷா வானிலை

சிறந்த காலநிலை விதிஷா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது விதிஷா

  • சாலை வழியாக
    விதிஷா சாலை வழியாக அனைத்து அண்டை நகரங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. டாக்ஸி சேவைகள் மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகளும் இங்கு நிறைய உள்ளன. போபாலில் இருந்து விதிஷாவிற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உதய்பூரிலிருந்து விதிஷா வரை செல்லவும் பேருந்துகள் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில் மூலம் விதிஷா அடைய எளிதான வழி விதிஷா ரயில் நிலையத்தில் இறங்குவதுதான். இது தில்லி - சென்னை ரயில் பாதையில் முக்கிய நிலையமாக உள்ளது. விதிஷா ரயில் நிலையம் இந்தியாவின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், விதிஷா மற்றும் போபாலை இணைக்கும் வழக்கமான ரயில் சேவைகளும் இங்கு உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையம் விதிஷா அடைய அருகிலுள்ள விமான நிலையமாகும். போபல் விமான நிலையம் தில்லி, மும்பை, குவாலியர் மற்றும் இந்தூர் போன்ற அனைத்து முக்கிய இடங்களுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. போபாலிலிருந்து துபாய் மற்றும் ஷார்ஜாவிற்கு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் இருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் விதிஷா உள்ளது. ஒரு வழி பாதைக்கு டாக்சி கட்டணம் தோராயமாக 1500 இருக்கும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri