கோவிந்த ராஜுல குட்டா என்றழைக்கப்படும் இந்த ஸ்தலம் ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாக வாரங்கல் நகரில் பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு மலையுச்சியில் ஒரு ராமர் கோயில் உள்ளது.
ராமபிரானின் தீவிர பக்தர் ஒருவரின் பெயரால் இந்த திருத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரத்தில் ஒரு ஹனுமான் சிலையும் உள்ளது. இந்த மலையுச்சி கோயிலுக்கு செல்வதற்கு 100 படிகளை ஏறிச்செல்ல வேண்டியுள்ளது.
மலைப்பாறையில் வெட்டப்பட்டுள்ள இந்த படிகளில் ஏறும்போது மிகுந்த கவனம் தேவை என்பதையும் ஏறுவது சிரமமாக இருக்கும் என்பதையும் பயணிகளும் பக்தர்களும் மனதில் இருத்திக்கொள்வது நல்லது.
ஸ்ரீ ராம நவமி திருநாளின்போது இந்த கோவிந்த ராஜுல குட்டா ஸ்தலமானது ஏராளமான ராமபக்தர்களால் நிரம்பி காணப்படுகிறது. அச்சமயம் மலையுச்சியில் வீற்றுள்ள பெரிய ரதம் ஒன்று விலை மதிப்பற்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. இந்த ரதம் வாரங்கலை சேர்ந்த ஹஜாரி இனத்தாரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications