பத்மாக்ஷி கோயில் எனும் இந்த புராதனக்கோயில் 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இது பத்மாக்ஷி தேவி எனும் பெண் தெய்வத்துக்காக கட்டப்பட்டுள்ளது. ஆன்மீக முக்கியத்துவத்துடன் கட்டிடக்கலை அம்சங்களும் சேர்ந்து காணப்படும் முக்கிய கோயிலாக இது பிரசித்தி பெற்று அறியப்படுகிறது.
கோயிலின் வாயிற்பகுதியில் சதுரமான தூண் ஒன்று கருப்பு சலவைக்கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது அன்னகொண்டா தூண் என்று அழைக்கப்படுகிறது. இந்த தூணில் காணப்படும் குறிப்புகளும் சித்தரிப்புகளும் இது ஒரு ஜைன திருத்தலமாக விளங்கிருக்கலாம் என்ற யூகத்திற்கு இடமளிக்கிறது. அற்புதமான கலையம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தூணை பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து மகிழ்கின்றனர்.



Click it and Unblock the Notifications