Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » வாரங்கல் » ஈர்க்கும் இடங்கள் » பக்கல் ஏரி

பக்கல் ஏரி, வாரங்கல்

23

வாரங்கல் நகருக்கு அருகிலேயே உள்ள பக்கல் சரணாலயத்தில் இந்த பக்கால் ஏரி அமைந்துள்ளது. இது மனித முயற்சியில் உருவான செயற்கை ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்டமான 30 கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய இந்த ஏரி 1213ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரின் ஆட்சியில் வெட்டப்பட்டுள்ளது. மயக்க வைக்கும் இயற்கை காட்சிகள் இந்த ஏரிப்பகுதியில் பயணிகளை வரவேற்கின்றன.

காணும் இடமெல்லாம் பசுமையான ரம்மியம் இந்த ஏரியை சுற்றிலும் நிரம்பி வழிகிறது. மனதை லேசாக்கும் அனுபவத்தை தரும் இந்த இடத்திலிருந்து பயணிகளுக்கு நகரவே மனம் வருவதில்லை.

கன்னிமை மாறாத மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி போன்றவை இந்த ஏரியின் பின்னணி மற்றும் சூழலில் காட்சியளிப்பதே இதற்கு காரணம். வருடமுழுதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிக்னிக் பயணமாக இந்த ஏரி ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

இந்த பக்கல் ஏரியின் கரைகளை ஒட்டியே பக்கல் சரணாலயம் அமைந்திருக்கிறது. இதில் பலவிதமான தாவரவகைகள் மற்றும் உயிரினவகைகள் காணப்படுகின்றன. சிறுத்தைகள், உடும்புபல்லிகள், முதலைகள், கரடிகள், மலைப்பாம்பு மற்றும் ஓநாய்கள் போன்ற விலங்குகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. மொத்தமாக 839 ச.கி.மீ பரப்பளவை இந்த சரணாலயம் உள்ளடக்கியுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue