வாரங்கல் கோட்டைக்கு அருகிலேயே இந்த ராக் கார்டன் எனப்படும் பாறைப்பூங்கா அமைந்துள்ளது. இது ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது. புள்ளிமான், வரிக்குதிரை, சிங்கல், கொம்புமான் போன்ற விலங்குகளின் பாறை வடிவமைப்புகள் இந்த பாறைப்பூங்காவில் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தத்ரூபமாக காட்சியளிக்கும் இந்த சிலை அமைப்புகள் இப்பகுதியிலுள்ள சிற்பக்கலைஞர்களின் திறமைக்கு சான்றாக உள்ளன.பலவிதமான ரோஜாச்செடிகள், மல்லிகைச்செடிகள் மற்றும் மரங்களும் இந்த பூங்கா வளாகத்தினுள் வளர்க்கப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கான மைதானமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதால் மாலை நேரங்களில் இங்கு உள்ளூர் மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்களும், சற்றே ஓய்வாக நடக்க விரும்புகிறவர்களும் இந்த ரம்மியமான பாறைப்பூங்காவிற்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications