ஆயிரம் தூண் கோயில் என்றழைக்கப்படும் இந்த புராதனக்கோயில் மஹாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் சூரியக்கடவுள் ஆகியோர் உறையும் ஆலயமாக இது வீற்றிருக்கிறது.
1163ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான ருத்ரதேவ் என்பவரால் இது கட்டப்பட்டுள்ளது. நுணுக்கமாக வடிக்கப்பட்ட 1000 தூண்களைக்கொண்டதாக அமைந்துள்ளதால் இதற்கு ஆயிரம் தூண் கோயில் என்ற பெயர் வந்துள்ளது. கலையம்சம் கொண்ட வாசல் அலங்கார அமைப்புகள், தூண்கள், கூரைவிமான அமைப்புகள் மற்றும் கல்வெட்டு குறிப்புகள் போன்றவை இந்த கோயிலில் நிரம்பியுள்ளன.
எனவே இது வாரங்கல் கோட்டைக்கு அடுத்தபடியாக வாரங்கல் நகரத்தில் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. கோயிலின் பின்னணியில் ஹனுமகொண்டா மலை வீற்றிருப்பது இந்த கோயிலின் அழகை இன்னும் கூட்டுகிறது.
வழவழப்பான ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட ஒரு நந்தி ஒன்றும் கோயிலின் வாசலிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை மயங்க வைக்கும் கட்டிடக்கலை அற்புதங்களுடன் இந்த கோயில் அமைதியாக வீற்றிருக்கிறது.
ஒப்பற்ற கலைத்திறமையின் உச்சமாக விளங்கிய காகதீய அரசாட்சிக்காலத்தை எதிரொலிக்கும் இந்த கோயில் காலங்களைக் கடந்து நீடித்து நிற்கிறது. தென்னிந்தக்கோயில்களிலேயே மிகப்பழமையான அற்புதக்கோயிலாக வரல்லாற்றியல் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்களால் இந்த ஆயிரம் தூண் கோயில் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications