டோக்கு இமாங் திருவிழா, வோக்காவில் கொண்டாடப்படும் மிகப் பெரும் திருவிழாக்களுள் ஒன்றாகும். இத்திருவிழா, அறுவடைக்குப் பின் சுமார் ஒன்பது நாட்கள், மிக்க ஆர்வத்தோடு லோதா பழங்குடியினரால் விமரிசையாகக் கொண்டாடப்படுப்படுகிறது.
அறுவடை காலத்தின் முடிவில் இத்திருவிழாவைக் கொண்டாடுவதன் மூலம் லோதா பழங்குடியினர் தங்களின் பல மாத கால உழைப்பின் பலனை வெகுவாக அனுபவித்து களிப்புறுவர்.
இத்திருவிழாவின் போது ஆண்களும், பெண்களும் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளை உடுத்தி எங்கெங்கும் ஒற்றுமையும், சகோதர பாவமும் மேலோங்க வளைய வருவர். இந்த சமயத்தில் இச்சமூகத்தினர் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வர்.
நீங்கள் நாகா பாரம்பரியத்தை அருகில் இருந்து அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினால், இத்திருவிழாவுக்குச் செல்வதன் மூலம் அத்தகைய சிறப்பான அனுபவம் கிடைக்கப் பெறலாம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் இத்திருவிழாவில் பாரம்பரிய பாடல்கள் மற்றும் நடனங்கள் உங்கள் புலன்களுக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
பல்வேறு இறைச்சிகளைக் கொண்டு நாவூற வைக்கும் சுவையில் சமைக்கப்படும் நாகா உணவுப் பதார்த்தங்களை சுவைக்க மறவாதீர்கள்.



Click it and Unblock the Notifications