எல்லாபூர் செல்லும் எவரும் தவிர்க்கவே கூடாத ஒரு அம்சம் இந்த ஜேனுகல்லுகுட்டா சன்செட் பாயிண்ட். மேற்குமலைத்தொடரில் 450 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த இட்த்திலிருந்து சூரிய அஸ்தமனத்தை ஒரு வித்தியாசமான காட்சியாக காணமுடியும்.
இந்த இடத்தின் பின்னணியில் கம்பீரமாய் பச்சை மலைத்தொடர்கள் காட்சியளிக்கின்றன. ஜேனுகல்லுகுட்டாவிலிருந்து மற்றொருபுறம் பார்த்தால் பெட்தி ஆறு அரபிக்கடலில் ஓடிக்கலப்பதையும் பார்த்து ரசிக்க முடியும்.
பலேகல்லுகுட்டா மற்றும் கொடேகல்லுகுட்டா என்ற இரண்டு பிரசித்தி பெற்ற அழகிய மலைகளும் இங்கு ஜேனுகல்லுகுட்டாவுக்கு அருகில் உள்ளன. ஜேனு என்றால் தேன், கல்லு என்றால் கல், குட்டா என்றால் மலை, எல்லாம் சேர்ந்து இந்த ஜேனுகல்லுகுட்டா என்ற பெயர் வந்தது.



Click it and Unblock the Notifications