Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அகர்தலா » ஈர்க்கும் இடங்கள் » நீர்மஹால்

நீர்மஹால், அகர்தலா

37

திரிபுரா மன்னர்களின் ராஜ இருப்பிடமாக விளங்கிய இந்த நீர்மஹால் மாளிகை திரிபுராவில் உள்ள அழகிய அரண்மனைகளில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது 6ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள ருத்ரசாகர் ஏரியின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது.

அழகிய தோற்றம் மட்டுமல்லாமல் கட்டிடக்கலை நுணுக்கத்திற்காகவும் இது மிக உயர்வாக கருதப்படுகிறது. பெயரிலேயே பொருள் விளங்கும்படியாக நீரின் நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்த அரண்மனை 1930ம் ஆண்டு பீர் பிக்ரம் கிஷோர் தெப்பர்மன் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

இந்த அரண்மனையின் கட்டுமான அமைப்பு ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி வடிவமைப்பு அம்சங்களை கலந்து மணற்பாறை மற்றும் வெண்சலவைக்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

இதில் பல கோபுரங்கள், பலகணிகள், பாலங்கள், மாடங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. நீரின் நடுவே கட்டப்பட்டிருந்தாலும் அரண்மனையை சுற்றி அழகிய தோட்டப்பூங்காக்கள் எப்போதும் பூத்துகுலுங்கும் வண்ணமலர்ச்செடி கொடிகளுடன் காணப்படுகின்றன.

அகர்தலா நகரத்திற்கு மிக அருகிலேயே அமைந்துள்ள நீர்மஹால் அரண்மனை திரிபுரா மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விஜயம் செய்யப்படும் இடமாக பிரசித்தி பெற்றிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed