திரிபுரா ஸ்டேட் மியூசியம் எனப்படும் இந்த அருங்காட்சியகம் 1970ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. இது அகர்தலா நகரத்தின் மையப்பகுதியில் HGB சாலையில் அமைந்துள்ளது.
திரிபுரா மாநிலத்தின் செழுமையான வரலாற்றை பிரதிபலிக்கும் பல அரும்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பல அரிய கருங்கற்சிற்பங்கள், கல்வெட்டுக்குறிப்புகள் மற்றும் பழங்கால நாணயங்கள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தொல் பொருட்கள் திரிபுரா மாநிலம் மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டவையாகும்.
பிலாக் வரலாற்றுத்தலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த சிலைகள் மற்றும் பெங்கால் கந்தா எம்பிராய்டரி கைவினைக்கலை தொடர்பான காட்சிப்பொருட்கள் இங்கு பிரதான முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களும் திரிபுரா மக்களின் நாகரிகம், மதநம்பிக்கை மற்றும் கலாச்சாரம் குறித்த சரியான புரிதலுக்கு உதவுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரையில் காலை 10 மணி முதல் 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது.