ஆக்ரா நகரத்தில் அதிகமான கோயில்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் மங்களேஷ்வர் கோயில், ஷீ கிருஷ்ண ப்ரணமி கோயில், ஆர்ய சமாஜ் கோயில் மற்றும் தயாள் பாக் ஸ்வாமி ஜி மஹராஜ் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்த கோயில்களின் பெரும்பாலானவை சிவனுக்கான கோயிலாகும். இவற்றில் ஒன்று தான் இந்த பாகேஷ்வர் நாத் கோயில். இது மேற்குடி பகுதியாகிய சிவில் லைன்ஸ் ஏரியாவில் ராஜா கி முண்டி எனும் இடத்துக்கு அருகே ராம்ரத்தன் சாலைக்கு சற்று அருகே உள்ளது.
நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் செயிண்ட் ஜான் கல்லூரி மற்றும் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அருகில் இந்த கோயில் அமைந்திருக்கிறது.
நகரப்பேருந்துகள் மூலமாக இந்த கோயிலுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் உள்ளன. 10 க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் இந்த கோயிலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளியூர் யாத்ரீகர்களும் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலில் வழிபடுவதற்கு வருகை தருகின்றனர்.