Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » பேரரசர் அக்பர் நினைவுச்சின்னம்

பேரரசர் அக்பர் நினைவுச்சின்னம், ஆக்ரா

76

சர்வதேச புகழ் பெற்றிருக்கும் தாஜ் மஹால் மட்டுமன்றி  வேறு பல முக்கியமான முகாலயர் காலத்து கட்டிடச்சின்னங்களும் ஆக்ராவில் உள்ளன. அவற்றில் பேரரசர் அக்பரின் சமாதி மாளிகையும் ஒன்று.

இது சிக்கந்த்ரா எனும் இடத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது. அக்பராலேயே  1605ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானம் அவரது மகனான ஜஹாங்கீரால் 1613ம் ஆண்டு எட்டு ஆண்டுகள் கழித்து முடிக்கப்பட்டது.

இந்த கல்லறை மாளிகை முழுக்க வெண் பளிங்குக்கற்களாலும் சிவப்பு மணற்பாறைக்கற்களாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மற்றும் ஹிந்து கட்டிடக்கலை மரபுகளைக்கலந்ததாக இதன் வடிவமைப்பு தோற்றமளிக்கிறது. மார்பிள் கற்களில் நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன.

இந்த கல்லறை மாளிகையிலுள்ள புலாந்த் தர்வாசா எனும் வாயில் அமைப்பு இதன் முக்கிய அம்சமாக சொல்லப்படுகிறது. கம்பீர வாசல் என்பது இதன் பெயரின் பொருளாகும்.

இந்த வாசலிலிருந்து ஒரு அகலமான வழிபாதை கல்லறையை நோக்கி செல்கிறது. ஒரு அழகிய விதான வளைவு மற்றும் வெண்பளிங்கால் ஆன நான்கு மினாரெட்டுகள் ஆகியவற்றை இந்த நுழைவாயில் கொண்டுள்ளது.

கலையம்சத்தோடு காட்சியளிக்கும் இந்த நுழைவாயில் அமைப்பு பிரதான கல்லறை மாளிகையை விடவும் பயணிகளை வசீகரிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Jul,Sat
Check Out
12 Jul,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Jul,Sat
Return On
12 Jul,Sun