Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஹமதாபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஹுதீசிங் ஜெயின் கோயில்

ஹுதீசிங் ஜெயின் கோயில், அஹமதாபாத்

105

ஹுதீசிங் ஜெயின் கோயில் எனும் இந்த ஜைனக்கோயில் 15வது ஜைன தீர்த்தங்கரரான தர்மநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 1848ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் ஷேத் ஹுதீசிங் கேஸ்ரி எனும் அஹமதாபாத் வணிகர் அளித்த 10 லட்ச ரூபாய் நன்கொடைப்பணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

முழுக்க வெண்பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் சலாட் வம்சத்தின் கட்டிடக்கலை நுட்பங்களின் சான்றாக கருதப்படுகிறது. பிரேம்சந்த் சலாட் எனும் கலைஞரின் வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

டெல்லி கேட் எனும் நுழைவாயில் அமைப்புக்கு வெகு அருகே இந்த கோயில் அமைந்திருக்கிறது. இதில் ஒரு மண்டபம், மாடக்கோபுரம் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் அடங்கிய 12 தூண்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

கோயிலின் பிரதான கருவறை இதன் கிழக்குப்பகுதியில் உள்ளது. இது தவிர இதர ஜைன தீர்த்தங்கரர்களுக்கான 52 சிறு சன்னதிகளும் இந்த கோயிலில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கீர்த்தி ஸ்தம்பம் அல்லது மஹாவீர் ஸ்தம்பம் என்று அழைக்கப்படும் தூண் அமைப்பு கோயிலின் பிரதான வாசல் அருகே காணப்படுகிறது. இது கோயில் கட்டப்பட்ட பிறகு வெகு நாள் கழித்து நிர்மாணிக்கப்பட்ட அமைப்பாகவும் சொல்லப்படுகிறது.

78 அடி உயரமுடைய இந்த கோபுரத்தூண் ராஜஸ்தானிலுள்ள சித்தூர் கோபுரத்தை ஒத்திருக்கிறது. முகலாய பாணி சிற்பக்குடைவுகளை இந்த கோபுர அமைப்பில் பார்க்க முடிகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 May,Fri
Check Out
30 May,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 May,Fri
Return On
30 May,Sat