மானெக் சௌக் எனும் இந்த இடம் பாபா மானெக் நாத் குருவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 15ம் நூற்றாண்டில் அஹமத் ஷா மன்னர் இப்பகுதியின் கோட்டையை நிர்மாணிக்கும்போது தனது அபூர்வ சக்தியால் இந்த பாபா அந்த முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
அதாவது காலையில் கோட்டை கட்டுமான வேலைகள் துவங்கும்போது பாபாவும் ஒரு பாயை முடைய ஆரம்பிப்பார். மாலையில் அவர் முடைந்த பாயை விரிக்கும்போது அன்று கட்டப்பட்ட கோட்டையின் பாகம் இடிந்து விடும்.
அலுத்துப்போன அஹமது ஷா மன்னர் கடைசியில் ஒரு தந்திரத்துடன் பாபாவை அழைத்து ஒரு பாட்டிலை காட்டி அதற்குள் நுழைந்து காட்டினால் அவரது மாந்திரிக திறமையை ஒப்புக்கொள்வதாக சவால் விடுத்துள்ளார்.
பாபாவும் அவ்வண்ணமே பாட்டிலுக்குள் தன்னை நுழைத்துக்கொண்டபோது அஹமது ஷா அந்த பாட்டிலை மூடி மண்ணில் புதைத்து விட்டார். இது இப்பகுதியில் சொல்லப்பட்டு வரும் கதை.
தற்போது இந்த மானெக் சௌக் மார்க்கெட் பகுதியில் காலை நேரத்தில் காய்கறி வியாபாரமும், மதிய நேரத்தில் நகை வியாபாரமும், மாலை நேரத்தில் சிற்றுண்டி விற்பனையும் மும்முரமாக நடைபெறுகின்றன.
இங்குள்ள கடைகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக விஜயம் செய்வதால் பரபரப்பான மார்க்கெட் பகுதியாக இந்த மானெக் சௌக் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications