விஷாலா எனும் உல்லாசப்பொழுதுபோக்கு பூங்கா ஒரு உண்மையான குஜராத்திய கிராமத்திற்கு விஜயம் செய்யும் அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வண்ணமயமான மண் குடிசைகள் மற்றும் மச்சான் எனப்படும் மர உச்சி வீடுகள் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. கரி அடுப்புகளின் வாசனையும் நாட்டுப்புற இசையின் ஒலியும் சேர்ந்து ஒரு அற்புதமான கிராமியச்சூழலை இந்த வளாகத்திற்கு அளிக்கின்றன.
தினமும் இந்த பூங்காவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. அசல் குஜராத்தி உணவு வகைகள் இங்கு இலைத்தட்டுகளில் பரிமாறப்படுவது மற்றொரு விசேஷம்.



Click it and Unblock the Notifications