சிவன் மற்றும் பிரம்மாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள கோயில்களின் தொகுப்பு இந்த ஹுச்சிமல்லி குடி கோயில்களாகும். 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த புராதனக்கோயில்கள் ஏஹோல் வழிச்செல்லும் எல்லா பயணிகளும் பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும்.
இங்குள்ள கருவறையில் ஜன்னல்கள் காணப்படுகின்றன. இதன் மீது ஒரு ரேக்காநகர(வட இந்திய பாணி கோபுரம்) கோபுரமும் உள்ளது. ஒரு பிரதட்சணப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னாளில் இக்கோயிலின் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக ஒரு எதிர் மூலஸ்தானமும் அர்த்தமண்டபமும் பிரதான கோயிலுடன் இணைத்து எழுப்பப்பட்டுள்ளது. இது இந்த ஸ்தலத்தின் அழகை மேலும் கூட்டுகிறது.
சுகநாசி எனப்படும் கருவறைப்பாதை இந்த கோயிலில்தான் முதன்முதலாக அமைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஹுச்சிமல்லிகுடிக்கு வடக்குத்திசையில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மற்றொரு சிறிய கோயிலும் உள்ளது.



Click it and Unblock the Notifications