Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஏஹோல் » ஈர்க்கும் இடங்கள் » மேகனகுடி தொகுப்பு கோயில்கள்

மேகனகுடி தொகுப்பு கோயில்கள், ஏஹோல்

43

மேகனகுடி அல்லது மெகுடி என்றழைக்கப்படும் ஜைன கோயில் திராவிட சிற்பக்கலையை கொண்டுள்ளது. ஏஹோலுக்கு வரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய கோயில் தொகுப்பு இது.

இது ஒரு மலைப்பாறை மீது அமைந்திருக்கும் 5ம் நூற்றான்டில் கட்டப்பட்ட கோயில் ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது. இரண்டு அடுக்குகளைக்கொண்டுள்ள இந்தக்கோயிலில் இயற்கையாய் அமைந்த குகை ஒன்றும் காணப்படுகிறது. இந்த கோயிலின் மையத்தில் காணப்படும் அறை கர்ப்பகிருகமாய் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் பின்புறத்தில் அந்தரல எனப்படும் எதிர்மூலஸ்தானமும் பிரதட்சணப்பாதையும் அமைந்துள்ளது. முன்புறத்தில் தூண்களுடன் காணப்படும் மண்டபம் உள்ளது. ஏஹோல் கல்வெட்டு என்று பிரசித்தமாக அறியப்படும் கி.பி 634ம் ஆண்டுக்குரிய கல்வெட்டுக்குறிப்பு இந்த கோயிலின் வெளிச்சுவரில் காணப்படுகிறது.

இந்த கோயில் தொகுப்பின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள கோயில் ஒரு சிறிய ஜைனக்குடைவறைக்கோயிலாக உள்ளது. இது ஒரு சுவர், வெளித்திண்ணை, கருவறை போன்றவற்றை கொண்டுள்ளது.

கருவறையில் ஐந்தடி உயர பஹுபாலி சிலையும், தீர்த்தங்கரர்களின் புடைப்புச்சிற்பங்களும் காணப்படுகின்றன. கருவறையின் மேற்பாகத்தின் மீது அமைக்கப்பட்ட மற்றொரு சிறு கரவறையும் இங்கு காணப்படுகிறது. இது பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

மற்றுமொரு முக்கிய அம்சமாக இந்தக்கோயில் 16 உத்தரங்களைக்கொண்ட வெளிப்பிரகார விதானத்தை கொண்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun