ஏஹோலின் மற்றொரு குறிப்பிடத்தக்க கோயிலான சூரியநாராயண கோயில் சூரியக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது 7ம் அல்லது 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இங்கு பிரதான விக்கிரகம் இரண்டடி உயரத்தில் துணைவிகளான உஷா மற்றும் சந்தியாவுடன் குதிரைத்தேரின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த கோயிலில் ரேக்காநகரா பாணி கோபுரமும் நான்கு தூண்களை கொண்ட கருவறையும் உள்ளது.
லாட்கான் கோயிலுக்கு வடகிழக்கே அமைந்துள்ள இந்தக் கோயில் அவ்வளாக சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தம் இல்லை என்றாலும் நேரம் இருப்பின் பார்க்க வேண்டிய கோயில் இது.



Click it and Unblock the Notifications