அய்சால் மாவட்டத்தில் உள்ள சுவாங்புயிலான் எனும் கிராமத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் இந்த கம்பீரமான ருங்டில் ஏரி எனப்படும் இரட்டை ஏரிஅமைந்திருக்கிறது. 2.5 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஏரிப்பகுதி முழுதும் ரம்மியமான இயற்கை எழில் அம்சங்கள் நிரம்பியுள்ளன.
ஒரு காலத்தில் இந்த ஏரி ஸ்தலத்தில் ஏராளமான கௌதாரி பறவைகள் வசித்திருந்தன. இன்றும்கூட பறவை ரசிகர்கள் இந்த ஏரிப்பகுதியில் பலவகையான பறவைகளை பார்த்து மகிழலாம்.
ருங்டில் ஏரியானது ஒரு சிறிய நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டு காட்சியளிக்கும் இரண்டு ஒரே மாதிரியான ஏரிகளின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. இருப்பினும் பூமிக்கு கீழே இரண்டு ஏரிகளும் இணைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.
ஏரியைச்சுற்றி காணப்படும் வனப்பகுதியில் பசுமை மாறாக்காடுகள் நிறைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் கரடி, மான், புலி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வசிக்கின்றன.
இந்த ருங்டில் ஏரிப்பகுதியில் பிக்னிக் மற்றும் கூடாரவாசம் போன்ற பொழுதுபோக்குகளிலும் பயணிகள் ஈடுபடலாம். அய்சால் நகரத்திலிருந்து டாக்சிகள் அல்லது நகரப்பேருந்துகள் மூலம் இந்த ஏரியை வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications