அணா சாகர் என்றழைக்கப்படும் இந்த செயற்கை ஏரி 13 கி.மீ பரப்பளவுக்கு பரந்து காணப்படுகிறது. பிருதிவிராஜ் சௌஹான் மன்னரின் தாத்தா அணாஜி சௌஹான் என்பவரால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 1135 முதல் 1150 ம் ஆண்டு வரை இந்த ஏரிக்கான நீர்ப்பிடிப்பு வசதிகள் உள்ளூர் மக்கள் உழைப்பினால் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்த ஏரியை சுற்றி அமைந்துள்ள தௌலத் பாக் தோட்டப்பூங்கா பேரரசர் ஜஹாங்கீர் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு தீவையும் தன்னுள் கொண்டுள்ள இந்த ஏரியைச்சுற்றிலும் அழகிய பூங்காக்கள் மற்றும் பளிங்கு மண்டபங்கள் ஆகியவை அழகுற அமைந்துள்ளன.
தௌலத் பாக் தோட்டப்பூங்காவின் கிழக்குப்பகுதியிலிருந்து படகுச்சவாரி மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஏரியை அழகுபடுத்தும் நோக்கில் பல புதிய கட்டுமானங்கள் முகலாயர்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏரிக்கு அருகிலுள்ள ஒரு உயரமான மலையில் ஆங்கிலேயர்கள் தங்குவதற்கு பயன்படுத்திய சர்க்யூட் ஹவுஸ் எனும் மாளிகையும் உள்ளது.



Click it and Unblock the Notifications