‘ஆலெப்பி நகரத்தில் உள்ள ஒரு புராதனமான புத்தர் சிலையானது கருமடி குட்டன் (கருமடி என்னும் ஊரிலிருந்து வந்த சிறுவன் என்பது இதன் பொருள்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பிறந்த புத்த மத மரபானது அக்காலத்தில் எல்லா ராஜ்ஜியங்கள் மற்றும் நாகரிகங்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தபோது அதன் தடயங்களையும், சின்னங்களையும் பல பிரதேசங்களில் காலப்போக்கில் விட்டுச்சென்றுள்ளது.
அப்படி கேரள பூமியில் காணப்படும் வரலாற்று சின்னம்தான் இந்த புத்தர் சிலை. இது 9ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. இதைப்போன்ற பல வரலாற்றுச்சின்னங்கள் பின்னாளில் அழிக்கப்பட்டுவிட்டாலும், இந்த பளிங்குக்கல்லால் ஆன புத்தர் சிலை காலங்களை கடந்து பௌத்த மரபின் வரலாற்று சாட்சியாய் காட்சியளிக்கிறது.
கேரளாவிலுள்ள ஒரே ஒரு ‘புத்தர் கோயில்’ என்ற புகழையும் இந்த ஸ்தலம் பெற்றுள்ளது. ஒரு யானையின் தாக்குதலில் கொஞ்சம் சேதமடைந்து காணப்படும் கருமட்டி குட்டன் புத்தர் சிலையானது பக்தர்களாலும் பயணிகளாலும் அதன் சரித்திர அடையாளம் மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்துக்காக பெரிதும் விரும்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications