‘கேரள மாநிலத்தின் அரிசிக்கிண்ணம்’ என்ற புகழைப் பெற்றுள்ள இந்த குட்டநாட் பகுதி கேரளப்பகுதியின் கிராமப்புற வனப்புக்கான உதாரண ஸ்தலமாகும். இப்பகுதியில், காற்றில் அலைபோன்று அசையும் நெல் வயல்கள், உயர்ந்தோங்கி நிற்கும் வலிமையான தென்னை மரங்கள் சூழ காட்சியளிக்கின்றன.
இந்த அழகுப்பிரதேசத்தில் அச்சன்கோவில், மணிமாலா, மீனாச்சில் மற்றும் பம்பா போன்ற ஆறுகள் பாய்கின்றன. இந்த ஆற்றுப்பாதைகள் நீர்ப்பாசனத்துக்கு மட்டுமன்றி அன்றாட அலுவல்களிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
படகுகள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள், மீன் போன்றவற்றை வியாபாரிகள் இந்த ஆற்றங்கரைகளில் உள்ள வீடுகளுக்கு விற்பது ஒரு அதிசயமான காட்சியாகும்.
பரபரப்பான மாநர வாழ்க்கையை மட்டுமே அனுபவித்த பயணிகள் இந்த நிதானமான வாழ்க்கை முறையை கண்டு மயங்காமல் இருக்கவே வாய்ப்பில்லை. குட்டநாட் பகுதியில் வாடகைப்படகுகளை ஏற்பாடு செய்துகொண்டு அருகிலுள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு நீர்ப்பாதை மார்க்கமாகவே பயணிகள் சென்றடையவும் வசதிகள் உண்டு.



Click it and Unblock the Notifications