செயிண்ட் ஆண்ட்ரூஸ் சர்ச் என்றழைக்கப்படும் இந்த கிறிஸ்த்துவ தேவாலயம் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அக்காலத்தில் கேரளப்பகுதியை ஆக்கிரமித்ததாக சொல்லப்படும் போர்த்துகீசியர்கள் கூரையுடன் காணப்பட்ட இந்த தேவாலயத்திற்கு கற்களாலும் மரத்தாலும் ஆன கட்டமைப்பை நிர்மாணித்து தந்துள்ளனர். காலப்போக்கில் இதன் புகழ் பெருகவே அதிக பக்தர்கள் கூட்டத்தை அனுமதிக்கும் வகையில் இது மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
‘செயிண்ட் செபாஸ்டியன் விருந்து’ எனும் திருவிழா இந்த தேவாலயத்தில் பிரசித்தமாக கொண்டாடப்படுகிறது. உள்ளூர் பாரம்பரிய அம்சங்களை தன்னுள் பொதித்துள்ள இந்த தேவாலயம் குறித்து பல கதைகளும் சம்பவங்களும் கூறப்படுகின்றன.
இங்கு வரும் யாத்ரீகர்கள் கடற்கரையை ஒட்டி நடைபயணம் மேற்கொண்டு உள்ளூர் மக்கள் தரும் உணவையும் பானங்களையும் ஏற்றுக்கொள்ளும் சம்பிரதாயமும் பின்பற்றப்படுகிறது.
பணிவு மற்றும் விருந்தோம்பல் போன்ற உன்னத மானுட குணாம்சங்களை வளர்க்கும் விதத்தில் பிறந்துள்ள இந்த சம்பிரதாயம் ஆச்சரியப்படத்தக்க உன்னதமான ஒரு சடங்காகும். இந்த ‘செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம்’ ‘ஆலெப்பி நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications