சித்தை கோயில் அல்மோராவிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு பிரபலமான புனிதத் தலம். இக்கோவிலை சைத்தை கோவில் என்றும் அழைப்பர்.
இக்கோவில், இந்து மதக் கடவுளான சிவபெருமானின் அவதாரமாக கருதப்படும் குமாவோன் பகுதியின் புராண கடவுளான கொலு தேவ்தாவிற்கு சம்ர்ப்பணம் செய்யப்பட்டது. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவில் சந்த் வம்சத்து தலைவர் ஒருவரால் எழுப்பப்பட்டது என நம்பப்படுகிறது.
மலைஉச்சியில் அழகுற அமைந்திருக்கும் இத்தலத்தில் சிர் பைன்கள் மற்றும் மிமொசா குவியல்களால் சூழப்பட்ட அடர்ந்த காடுகள் காண்போரை ரசிக்கத் தூண்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் இத்தலம் வந்து தங்கள் பிராத்தனையை சமர்ப்பிக்கின்றனர்.
நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்காமல் போனால் அந்த நீதிமன்ற முத்திரைத் தாள்களை இக்கோவிலின் சுவர்களில் ஒட்டி வைத்து நீதி கிடைக்கும் படி பக்தர்கள் வேண்டி செல்கின்றனர்.
பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறினால் ஆடுகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அல்மோராவிலிருந்து இக்கோவிலுக்கு செல்ல பஸ், டாக்சி, அல்லது வண்டிகள் என அனைத்து வசதிகளும் உண்டு.



Click it and Unblock the Notifications