அமராவதியின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும் மிகச் சிறந்த ஆதாரமாக திகழ்ந்து வரும் தொல்பொருள் அருங்காட்சியகம் கிருஷ்ணா நதிக் கரையின் வலது புறத்தில் அமைந்திருக்கிறது.
இந்திய கலை வரலாற்றினை எடுத்துச் சொல்லும் அதேவேளையில் கலை மற்றும் கைவினைப் பொருட்களின் வழி அமராவதியின் பெரும் செல்வத்தை தொல்பொருள் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தி வருகிறது.
தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகள் 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. அதோடு தாமரை மற்றும் பூர்ணகும்பா உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் அமராவதியின் பாரம்பரியத்துக்கு மிகச் சிறந்த அடையாளங்களாகும்.
மேலும் அமராவதியின் நற்பேறு மற்றும் செல்வச் செழிப்பை குறிக்கும் விதமாக சின்னங்கள் சிலவும் இந்த தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் நீங்கள் அறிந்துகொள்ளும் செய்திகள் போல வரலாற்று புத்தகங்களில் கூட உங்களால் கற்க முடியாது என்பது திண்ணம்.



Click it and Unblock the Notifications