குருத்வாரா சேஹர்தா சாஹிப் என்றழைக்கப்படும் இந்த குருத்வாரா அம்ரித்ஸர் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள குரு கி வடாலி எனும் கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
6 வது சிக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் சிங்ஜி இந்த கிராமத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது தனது மகனின் பிறப்பை கொண்டாடுவதற்காக குரு அர்ஜன் தேவ்ஜி ஒரு பெரிய கிணறை இப்பகுதியில் உருவாக்கி அதற்கு சேஹர்தா என்று பெயரிட்டுள்ளார்.
அக்காலத்தில் 6 பாரசீக உருளைகளை பயன்படுத்தி இந்த கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் மூடப்பட்டு விட்டாலும் இந்த கிணற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கப்பட்டு தீர்த்தக்குளத்தில் விடப்படுகிறது.
இந்த கிணற்றின் பெயராலேயே அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட குருத்வாராவில் ஒரு மையக்கூடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ கருவறை அமைப்பு உள்ளது.
கருவறைக்கு மேலே உச்சியில் தங்கத்தால் ஆன தாமரைக்கலச கோபுரம் காணப்படுகிறது. மையக்கூடத்திற்கு எதிரே 25 மீ உயரமுள்ள இரண்டு கொடிக்கம்பங்களும் அமைந்துள்ளன.
நிஷான் சாஹிப் எனும் சீக்கிய புனிதக்கொடிகள் இந்த கம்பங்களில் ஏற்றப்பட்டுள்ளன. ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி எனும் குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த குருத்வாரா ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications