இஸ்க்கான் கோயில் அல்லது ஷீ ஷீ கௌர் ராதா கிருஷ்ணா கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அம்ரித்ஸர் நகரில் சௌக் மோனி பஜார் எனும் இடத்தில் அமைந்துள்ளது.
2011ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயில் சர்வதேச ஆன்மீக அமைப்பான ‘இஸ்க்கான்’ எனப்படும் ஹரே கிருஷ்ணா இயக்க ஸ்தாபனத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
லாப நோக்கு கொண்டிராத இந்த மையம் கௌடியா வைஷணவ மரபை சேர்ந்த குரு மஹா சைதன்யபிரபு அவர்களின் மார்க்கத்தை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆன்மீக இயக்கமாகும்.
சர்வதேச அளவில் இது தொடர்பான செயல்பாடுகளை இந்த இயக்கம் மேற்கொண்டு வருகிறது. கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் ஆர்வம் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள் இந்த இஸ்க்கான் கோயிலுக்கு விஜயம் செய்யலாம்.



Click it and Unblock the Notifications