ஔரங்கபாத் குகைகள் பீபீ கா மஃக்பாராவுக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்த குகைகள் 2-ஆம் நூற்றாண்டு மற்றும் 7-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட்வைகள்.
இங்கு புத்த மரபை சேர்ந்த குகைகள் மொத்தம் பத்து உள்ளன. அவைகள் அனைத்தும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் ஐந்தும் மேற்கு தொகுப்புக் குகைகளாகவும், கடைசி ஐந்தும் கிழக்கு தொகுப்புக் கோயில்களாகவும் அறியப்படுகின்றன. குறிப்பாக 3 மற்றும் 7 ஆம் குகைகள் காண்போரை எளிதில் மயக்கம் கொள்ள செய்திடும் பேரழகு வாய்ந்தவைகள்.
இந்த குகைகளில் காணப்படும் உருவங்களும், அலங்காரங்களும் தந்த்ரிக் ஹிந்துமத பாதிப்பால் உருவாக்கப்பட்டவை. இக்குகைகளை பயணிகள் காலை 9 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை கண்டு களிக்கலாம். இதற்கு நுழைவுக் கட்டணமாக இந்தியர்களுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications