சிவனுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கிரிஷ்னேஷ்வர் கோயில் மற்றுமொரு ஜோதிர்லிங்க திருத்தலமாகும். ஔரங்காபாத் மற்றும் புகழ் பெற்ற எல்லோரா குகைக்கோயில்களுக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கோயில் குஷ்மேஷ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அஹில்யாபாய் ஹோல்கார் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த புராதனமான கோயில் ஏராளமான பக்தர்களை வருடந்தோறும் ஈர்க்கின்றது. இது சத்ரபதி சிவாஜியின் பாட்டனாரால் 16ம் நூற்றாண்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜோதிர்லிங்க கோயிலுக்கு ஔந்தா நாகநாத் ஸ்தலத்திலிருந்து சுலபமாக விஜயம் செய்யலாம். சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் சென்றடையும்படி இந்த கிரிஷ்னேஷ்வர் கோயில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications