Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாகா பீச் » ஈர்க்கும் இடங்கள் » கேப் டவுன் கஃபே

கேப் டவுன் கஃபே, பாகா பீச்

19

டிட்டோஸ் சாலையில் இருக்கக்கூடிய விடுதிகளிலேயே பயணிகளிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கும் இரவு விடுதி இந்த கேப் டவுன் கஃபே தான். எனினும் இங்கு நீங்கள் ஐபிஸ் அல்லது ஈடேப் போன்ற பிரபலமான பிராண்டுகளை பார்க்க முடியும். அதற்கு இந்த இரவு விடுதி புகழ்பெற்ற டிட்டோஸ் கஃபே நிர்வாகத்தால் நடத்தப்படுவதே காரணம்.

கேப் டவுன் கஃபேவின் உயரமான மேற்கூரையும், மிகப்பெரிய எல்.சி.டி திரைகளும், அதிரவைக்கும் இசையும், அற்புதமான கோவான் உணவும் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

மேலும், இது மற்ற விடுதிகளை போல் அல்லாமல் உங்கள் செலவுக்கு ஏற்ற இரவு விடுதியாக இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதும். அதுமட்டுமில்லாமல் இங்கு கர்வ்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் போட்டிக் பயணிகளை வெகுவாக கவரும் அமசங்களில் ஒன்று.

கேப் டவுன் கஃபேவுக்கு வெளிப்புறம் உள்ள உணவகத்தில் மரத்தினால் ஆன மேசைகளில் நீங்கள் உங்கள் நண்பர்களுடனோ, குடும்பத்தினரிடமோ கூட்டமாக அமர்ந்து குதூகலமாக பேசிக்கொண்டே உணவருந்தலாம்.

குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் செம்மறி ஆட்டுக்குட்டியின் தந்தூரி வெளிநாட்டு பயணிகளிடையே மிகப்பிரபலம். இது தவிர டிட்டோஸ் சாலையில் நீங்கள் எங்கு தேடினாலும் இந்த விடுதியில் கிடைப்பது போல் 70 ரூபாயில் வேறெங்கும் பீர் வாங்க முடியாது.

கேப் டவுன் கஃபேவுக்குள் நுழைவதற்கு பெரும்பாலும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருந்தாலும் இந்தியர்களுக்கு மட்டும் வார இறுதி நாட்களில் வரிகள் விதிக்கப்படுவது உண்டு.

கேப் டவுன் கஃபேவுக்கு வருவதற்கு முன் சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த விடுதிக்கு வரும் பெரும்பான்மையானவர்கள் இரவு வேகுநேரமானாலும் மேசைகளை காலி செய்வதில்லை. எனவே நீங்கள் விரும்பினால் கொஞ்சம் செலவு செய்து வி.ஐ.பி இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தவிர உங்களுக்கு கார் பார்கிங் செய்து தர இங்கு வேலட் சேவை ஏதுமில்லை. மேலும் ஒரு சில நாட்களில் நிறைய வாகனங்களை டிட்டோஸ் சாலையில் பார்க்கிங் செய்ய போக்குவரத்து காவலர்கள் அனுமதிப்பதில்லை. எனவே சற்று தள்ளி வேறு எங்காவது வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்துதான் கேப் டவுனுக்கு வர வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Apr,Sat
Check Out
05 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Apr,Sat
Return On
05 Apr,Sun