திரிவதிநாத் கோயில் பரேலி நகரத்தில் உள்ள ஆறு புராதன சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது நகர எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவபெருமான் திரிவதிநாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
புராணக்கதைகளின்படி சிவன் அல்லது திரிவதிநாதர் தான் ஒரு இடையனின் கனவில் தோன்றுவேன் என்று ஞானதிருஷ்டியின் மூலம் கூறியிருந்தார். மூன்று ஆல மரங்களின் கீழே அந்த இடையன் அமர்ந்திருப்பான் என்றும் சொல்லியிருந்தார்.
அதன்படியே சிவபெருமான் அந்த ஆலமரங்களின் அடியில் தூங்கிக்கொண்டிருந்த இடையனின் கனவில் சிவலிங்க ரூபமாக தோன்றியுள்ளார். அவன் கண் திறந்து பார்த்தபோது மரத்தின் அடிவாரத்தில் சிவலிங்கம் கிடந்துள்ளது.
விக்ரம சம்வாத் பஞ்சாங்க 1474ம் வருடத்தின்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது பாபா திரிவேதி நாத் பகவான் லிங்க ரூபத்தில் வெளிப்பட்ட பிரகத்ய திவாஸ் எனும் நாளோடு ஒத்திருக்கிறது.
இந்த திரிவதிநாத் சிவனை நிஜ பக்தியோடு வணங்கும் பக்தர்களின் கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படுவதாக நம்பிக்கை நிலவி வருகிறது. எனவே தினமும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications