கேரளாவின் ஹோஸ்துர்க் நகரத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள நித்யானந்தாஷ்ரம், சுவாமி நித்யானந்தாவால் நிறுவப்பட்டது. இங்கு மொத்தம் 45 குகைகள் செம்பூராங்கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.
இந்த குகைகள் புகழ்பெற்ற ஹோஸ்துர்கா கோட்டைக்கு வெகு அருகில் அமைந்திருக்கிறது. நித்யானந்தாஷ்ரம் குகைகள் தியானம் செய்வதற்கு வெகுப் பொருத்தமான இடம்.
இதன் காரணமாக உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த குகைகளை தேடி வந்து செல்கின்றனர். இங்கு அமர்ந்திருக்கும் நிலையில் காணப்படும் சுவாமியின் பஞ்சலோக சிலை மிகவும் நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த குகைகள் காசர்கோடிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் நித்யானந்தாஷ்ரம் குகைகளை நீங்கள் எந்த சிரமமுமின்றி அடையலாம்.



Click it and Unblock the Notifications