Search
  • Follow NativePlanet
Share

பேலூர் - ஹொய்சளர் காலத்திய புராதன நகரம்

16

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாஸ்தலங்களில் பேலூர் நகரமும் ஒன்று. ஹாசன் மாவட்டத்தில் உள்ள இந்த கோயில் நகரம் பெங்களூர் நகரத்திலிருந்து 220 கிலோமீட்டர் பயண தூரத்திலேயே உள்ளது. அதிகமான கோயில்களைக் கொண்டுள்ளதால் இது தென்னிந்தியாவின் ‘பெனாரஸ்’ அல்லது ‘தக்ஷிண காசி’ என்று அறியப்படுகிறது.

வரலாற்றுப்பின்னணி

வரலாற்றுக்காலத்தில் ஹொய்சள சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இந்த பேலூர் திகழ்ந்துள்ளது. ஹொய்சளர்களின் மற்றொரு தலைநகரமான ஹலேபீட் இங்கிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஹொய்சள கட்டிடக்கலையின் புகழ்வாய்ந்த அடையாளங்களாக கருதப்படும் இந்த இரண்டு நகரங்களும் சேர்ந்தே சுற்றுலா ஸ்தலமாக அறியப்படுகின்றன.

பேலூரிலுள்ள உன்னதமான கோயில் வளாகமாக சென்னகேசவா கோயிலைக்குறிப்பிடலாம். விஷ்ணுவுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலில் பிரம்மாண்டமாய் உயர்ந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் வாயில் கட்டமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. உயிர்பெற்று எழுமோ என்று பிரமிக்கக்கூடிய நேர்த்தியுடன் வடிக்கப்பட்ட பல சிற்பங்கள் இந்த கோயிலில் நிறைந்துள்ளன.

இந்த கோயில் தென்னிந்திய சிற்பக்கலை பாணியில் அமைந்துள்ளது. இந்த கோயிலை கட்டி முடிக்க ஒரு நூற்றாண்டுக்கும் மேல் ஆனதாக கூறப்படுகிறது.

பேலூர் பகுதியில் இதர முக்கியமான காணக்கூடிய அம்சங்களாக தொட்டகடவல்லியில் உள்ள லட்சுமி தேவி கோயில் மற்றும் சிரவணபெலகொலாவில் உள்ள ஜைனக்கோயில்கள் போன்றவற்றைக் கூறலாம்.

பேலூர் நகரம் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் பாதையால் நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகாமை ரயில் நிலையம் 38 கி.மீ தூரத்தில் உள்ள ஹாசன் ரயில் நிலையம் ஆகும். பேலூரிலிருந்து ஹாசன், பெங்களூர், மங்களூர் மற்றும் மைசூருக்கு அதிக எண்ணிக்கையில் மாநில அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேலூர் சிறப்பு

பேலூர் வானிலை

சிறந்த காலநிலை பேலூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பேலூர்

  • சாலை வழியாக
    பேலூர் நகரம் நல்ல முறையில் அருகாமை நகரங்களுடன் சாலை வசதிகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர், மைசூர், மங்களூர், மடிகேரி, ஷிமோகா, சிக்மகளூர், ஹாசன் போன்ற நகரங்களிலிருந்து பேலூருக்கு மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பேலூருக்கான அருகாமை ரயில் நிலையமாக ஹாசன் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது பேலுரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ளது. ஹாசன் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூர், மைசூர், மங்களூர் நகரங்களுக்கு ரயில் இணைப்புகள் உள்ளன. இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் டாக்ஸி அல்லது பேருந்துகள் மூலம் பயணிகள் பேலூருக்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பேலூருக்கு அருகில் மங்களூரில் விமான நிலையம் உள்ளது. முன்பு பாஜ்பே விமான நிலையம் என்று அழைக்கப்பட்ட இது பேலூரிலிருந்து 169 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் பெங்களூர், மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்கள் மற்றும் மத்திய கிழக்காசிய நகரங்களுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu