இந்து கோவிலான இது ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ளது. கொனார்க் சூரிய கோவிலுக்கு அடுத்த சூரிய கோவிலாக புகுடா பிரான்சிநாராயண் கோவில் கருதப்படுகிறது. மேற்கு பக்கமாக உள்ள இந்தக் கோவிலில் சுரிய அஸ்தமனத்தின் போது சிலையின் மீது சூரிய ஒளி படுகிறது.
சிரிகர பஞ்சதேவா என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் சூரிய பகவான் ஏழு குதிரைகள் பொறுத்திய தேரில் செல்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, சம்பா தசமி ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications