Search
  • Follow NativePlanet
Share

சைல் – தெய்வீக மணம் கமழும்  கோடைகால ஓய்விடம்!

16

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் தான் சைல். கிச்னர் பிரபுவின் ஆணைப்படி சிம்லாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பாட்டியாலா மன்னர் மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங்கின் கோடை கால தலைநகராக இவ்விடம் இருந்திருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தியதற்கு பதிலடியாக மகாராஜா புபூந்தர் சிங் சைல் அரண்மனையை கட்டி இவ்விடத்தை தன்னுடைய கோடைகால தலைநகராக நிர்ணயித்தார்.

1891-ல் கட்டப்பட்ட சைல் அரண்மனை சைலின் ராஜ பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கிறது. இங்குள்ள மற்றுமொரு சுற்றுலாவிற்கேற்ற இடமாக தனித்தன்மையான தாவரங்கள் மற்றும் விலங்குளையுடைய சைல் வனவிலங்குகள் சரணாலயம் விளங்குகிறது.

இந்திய முன்ட்ஜாக் மான்கள், சிறுத்தைப்புலி, கொண்டையுடைய முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கோரல், சம்பார் மற்றும் ஐரோப்பிய சிவப்பு மான்கள் ஆகிய விலங்குகளை இங்கு காண முடியும்.

உலகத்திலேயே மிகவும் உயரமான இடத்தில், 2444 மீட்டர் உயரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று இங்கு அமைந்திருப்பதோடு, ஒரு போலோ மைதானம் ஒன்றையும் இங்கு நீங்கள் பார்க்கலாம். இவை இரண்டும்  தற்பொழுது சைல் இராணுவப் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ளன.

குருத்துவரா சாஹிப், காளி கா டிப்பா மற்றும் மகராஜாவின் அரண்மனை ஆகியவை இங்கிருக்கும் இதர முக்கியமான சுற்றுலாதலங்களாகும். அதோடு இந்த இடம் மலையேற்றத்திற்கும், மீன்பிடிப்பிற்கும் மிகவும் பொருத்தமான இடமாகும்.

சைலை விமானம், ரயில் மற்றும் சாலை வழிகளில் சுலபமாக அடைய முடியும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான  கோடைகாலத்தில் இவ்விடத்திற்கு வர மிகவும் ஏற்ற பருவமாகும்.

வசதியான விரும்பத்தக்க பருவநிலையை குளிர்காலத்திலும் வழங்குவதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குளிர்காலங்களிலும் சைலுக்கு வருவார்கள்.

சைல் சிறப்பு

சைல் வானிலை

சிறந்த காலநிலை சைல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சைல்

  • சாலை வழியாக
    45கிமீ தொலைவிலிருக்கும் சிம்லாவிலிருந்து சைல் நகரத்திற்கு சில டீலக்ஸ் வகை பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. அருகிலுள்ள பிற நகரங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் சைல் செல்வதற்கான பேருந்துகளை பெற முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சைல் நகரிலிருந்து சோலன் ரயில் நிலையம் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. மேலும் கல்கா மற்றும் சண்டிகர் ரயில் நிலையங்கள் சைல் நகரத்திலிருந்து முறையே 52, 97 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சைல் நகரத்திற்கு அருகிலிருக்கும் விமான நிலையமாக 63கிமீ தொலைவிலுள்ள ஜுப்பர்காட்டி விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையம் டெல்லி, சண்டிகர், மும்பை மற்றும் சிம்லா போன்ற முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விமான நிலையத்துக்கு நீங்கள் வந்து சேர்ந்த பின் சைல் செல்வதற்கு டாக்ஸிகள் மற்றும் ஜீப்புகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Mar,Thu
Check Out
13 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri