Search
  • Follow NativePlanet
Share

சந்தெளளி - ஆசிய சிங்கங்களின் சரணாலயம்!

3

`நரொதம்' குடும்பத்தை சேர்ந்த `பர்ஹௌலியா ராஜபுத்திர' வம்சத்தவரான `சந்திர ஷா' என்பவரால்  நிறுவப்பட்ட சந்தெளளி நகரம் வாரணாசியில்  இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சந்திர ஷாவின் வழித்தோன்றல்களால் பிற்காலத்தில் இங்கு ஒரு கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை அழிவின் விளிம்பில் இருந்தாலும் இன்றும் பார்வையாளர்களை பெரிதும்  கவர்கிறது. 

சந்தெளளி  மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

சந்தெளளியில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் `ஹகியா காளி மந்திர்' மற்றும் `பாபா லதீப்ஷா'வின் கல்லறை  போன்றவை மிக முக்கியமானவை. சந்தெளளி வனவிலங்கு சரணாலயம் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு எல்லாம் சிகரமாக விளங்குகிறது.

இந்தியாவில் அதிகம் அறியப்படாத சரணாலயங்களில் ஒன்றான இங்கு,  விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களின் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. வெகுஜனசுற்றுலாவில் இருந்து தப்பித்து வரும் இந்த சரணாலயம் அதனுடைய உண்மையான அழகை தன்னுள் பாதுகாத்து வருகிறது. 

இது ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சரணாலயம் ஆகும். ஆசிய சிங்கங்கள் அழிவின் விழிம்பில் இருப்பதனால் இந்த சரணாலயத்தில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இந்த சரணாலயம் பல்வேறு  விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது.  

இந்த சரணாலயத்தில் பல்வேறு சுற்றுலா இடங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு மயிர்கூச்செரியும் `ராஜ்தாரி' மற்றும் `தேவ்தாரி' என்கிற இரண்டு நீர்வீழ்ச்சிகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

சந்தெளளியை பார்க்க சிறந்த நேரம்

அக்டோபர் மற்றும் மார்ச் வரை உள்ள 6 மாதங்களே சந்தெளளிக்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் ஆகும்.

சந்தெளளியை எவ்வாறு அடைவது?

சந்தெளளியை விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக எளிதாக அணுகலாம்.

சந்தெளளி சிறப்பு

சந்தெளளி வானிலை

சிறந்த காலநிலை சந்தெளளி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சந்தெளளி

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 2 சந்தெளளியை ஊடறுத்து செல்கிறது. இந்நகரம் உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற நகரங்களுடன் மாநில பொது போக்குவரத்து பேருந்து சேவை மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து நிறுவனங்களும் சந்தெளளியில் இருந்து மற்றும் சந்தெளளிக்கு சொகுசு பேருந்துகளை இயக்குகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சந்தெளளி ரயில் நிலையம் முகலாய சராய்-ஸஸரம் ரயில் இணைப்பில் அமைந்துள்ளது. இங்கிருந்து தில்லி, வாரணாசி, கொல்கத்தா மற்றும் ஆக்ரா போன்ற பிற முக்கிய இந்திய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சந்தெளளிக்கு மிக அருகில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வாரணாசி விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து, நீங்கள் ஒரு டாக்சி அல்லது பேருந்து உதவியுடன் சந்தெளளியை எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
27 Apr,Mon
Check Out
28 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
27 Apr,Mon
Return On
28 Apr,Tue